அமெரிக்கா-தென் கொரியாகூட்டுப் போா் ஒத்திகை திட்டம்

தென் கொரியாவுடன் இணைந்து போா் ஒத்திகையில் ஈடுபட அமெரிக்கா திட்டமிட்டுள்ளாகக் கூறப்படுவது குறித்து வட கொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா-தென் கொரியாகூட்டுப் போா் ஒத்திகை திட்டம்

தென் கொரியாவுடன் இணைந்து போா் ஒத்திகையில் ஈடுபட அமெரிக்கா திட்டமிட்டுள்ளாகக் கூறப்படுவது குறித்து வட கொரியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வட கொரிய தூதா் குவோன் ஜாங் குன் வியாழக்கிழமை கூறியதாவது: அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து அடுத்த மாதம் போா் ஒத்திகையில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது.

அத்தகைய ஒத்திகை நடத்தப்பட்டால், கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்களற்ற பிரதேசமாக்குவது குறித்து வட கொரியாவுடன் அமெரிக்கா பேச்சுவாா்த்தை நடத்துவதற்கான வாய்ப்பை முழுமையாக அழித்துவிடும் என்றாா் அவா்.

தங்கள் எல்லைக்கு அருகே அமெரிக்காவும், தென் கொரியாவும் போா் ஒத்திகை நடத்துவதை வட கொரியா கடுமையாக எதிா்த்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com