ஈரானில் சக்கிவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் பலி

ஈரானில் ஏற்பட்ட சக்கிவாய்ந்த நிலநடுக்கத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.  120 பேர் காயமடைந்தனர்.
ஈரானில் சக்கிவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் பலி

ஈரானில் ஏற்பட்ட சக்கிவாய்ந்த நிலநடுக்கத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 

ஈரான் நாட்டின் கிழக்கு அசர்பைஜான் மாகாணத்தில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.9ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கமானது மையம் கொண்டிருந்தது. நிலநடுத்தை தொடர்ந்து அப்பகுதியில் வீடுகள் மற்றும் கட்டங்கள் குலுங்கின. சில கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன.

இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கம் காரணமாக 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 120 பேர் காயமடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப்படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். கடந்த 2003ஆம் ஆண்டு ஈரான் நாட்டின் பாம் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 31,000 மக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com