இராக்கில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் 300 பேர் உயிரிழப்பு

பாக்தாத்தில் சனிக்கிழமை முதல் நடைபெறும் போராட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் இராக் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர்.
இராக்கில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் 300 பேர் உயிரிழப்பு

இராக்கில் ஊழல், வேலைவாய்ப்பின்மைக்கு எதிராகவும், அரசியல் சீா்திருத்தங்களை வலியுறுத்தியும் கடந்த மாதத் தொடக்கத்திலிருந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் பாக்தாத்தில் சனிக்கிழமை முதல் நடைபெறும் போராட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் இராக் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர், 100-க்கும் மேற்பட்டோர் விரட்டியடிக்கப்பட்டனர். போராட்டக்காரர்கள் தங்க பயன்படுத்திய தற்காலிக குடியிருப்புகளுக்கு தீ வைக்கப்பட்டன.

இந்த போராட்டங்களின் காரணமாக தற்போது வரை 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இராக்கின் மனித உரிமைகளுக்கான சுயாதீன உயர் கமிஷன் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com