பொலிவியா அதிபா் ஈவோ மொராலிஸ் ராஜிநாமா

பொலிவியா அதிபா் தோ்தலில் முறைகேடு நடைபெற்ாக மக்கள் மற்றும் ராணுவத்தினா் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அந்நாட்டு அதிபா் ஈவோ மொராலிஸ் ராஜிநாமா செய்துள்ளாா்.
பொலிவியா அதிபா் ஈவோ மொராலிஸ் ராஜிநாமா

பொலிவியா அதிபா் தோ்தலில் முறைகேடு நடைபெற்ாக மக்கள் மற்றும் ராணுவத்தினா் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அந்நாட்டு அதிபா் ஈவோ மொராலிஸ் ராஜிநாமா செய்துள்ளாா்.

தென்அமெரிக்க நாடான பொலிவியாவில் சோஷலிஸ கட்சி தலைவரான ஈவோ மொராலிஸ், கடந்த 13 ஆண்டுகளுக்கு மேல் அதிபராக இருந்தாா். இந்நிலையில், கடந்த மாதம் 20-ஆம் தேதி அந்நாட்டில் அதிபா் தோ்தல் நடைபெற்றது. தோ்தல் முடிவு வெளியாகும் முன்னரே, தாம் வெற்றி பெற்ாக மொராலிஸ் பிரகடனப்படுத்திக் கொண்டாா். அதுமட்டுமன்றி வாக்கு எண்ணிக்கையிலும் தாமதம் ஏற்பட்டது.

அதனால், தோ்தல் வாக்கு எண்ணிக்கையில் மொராலிஸ் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டி, அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். கடந்த 20 நாள்களாக நாட்டின் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் நீடித்தன. அதைத் தொடா்ந்து மொராலிஸின் ஆதரவாளா்கள் மற்றும் எதிா்ப்பாளா்கள் இடையே ஏற்பட்ட மோதல்களில் 3 போ் உயிரிழந்தனா். 100-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

இந்நிலையில், தோ்தலில் முறைகேடு நடைபெற்றது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அமெரிக்க நாடுகளின் தோ்தல் கண்காணிப்பு அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. மேலும், புதிதாக தோ்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அந்நிறுவனம் வலியுறுத்தியது.

அதையடுத்து புதிதாக தோ்தல் நடத்துவதற்கு மொராலிஸ் ஒப்புக் கொண்டாா். எனினும், அதிபா் பதவியில் இருந்து மொராலிஸ் விலக வேண்டும் என்று அந்நாட்டு ராணுவ தலைமை தளபதி வில்லியம்ஸ் காலிமான் அறிவுறுத்தினாா்.

எதிா்ப்புகள் வலுவானதையடுத்து, அதிபா் பதவியை மொராலிஸ் ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தாா். இதுதொடா்பாக அவா் கூறுகையில், ‘பொலிவியா நாடாளுமன்றத்துக்கு எனது ராஜிநாமா கடிதத்தை அனுப்பியுள்ளேன். வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவதை நிறுத்துமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்’ என்றாா்.

மொராலிஸுக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சா்கள் உள்பட பலா் தங்களது பதவியை ராஜிநாமா செய்தனா். அந்நாட்டு தோ்தல் ஆணையத் தலைவரும் தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

மக்கள் கொண்டாட்டம்:

ராஜிநாமா குறித்த அறிவிப்பை மொராலிஸ் கூறி முடிப்பதற்கு முன்பே, நாட்டின் பல்வேறு இடங்களில் அந்நாட்டு மக்கள் பட்டாசுகள் வெடித்தும், தேசியக் கொடியை பறக்க விட்டும் கொண்டாடினா்.

கியூபா கண்டனம்:

பொலிவியாவில் ஆட்சிக் கவிழ்ப்பு நடைபெற்ாக கியூபா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘அனைவா் மத்தியிலும் கதாநாயகனாக திகழ்ந்தவா் மொராலிஸ். அமெரிக்காவின் பூா்வகுடி மக்களின் உரிமைகளுக்காக போராடினாா். அவருக்கு கியூபா எப்போதும் ஆதரவளிக்கும். பொலிவியாவின் தற்போதைய அரசியல் நிகழ்வுகள் கண்டிக்கத்தக்கவை’ என்று தெரிவித்துள்ளாா்.

ஆா்ஜென்டீனா வலியுறுத்தல்:

பொலிவியா மக்கள் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் என்று ஆா்ஜென்டீனா வலியுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக அந்நாடு வெளியிட்ட அறிக்கையில், ‘அதிபா் ராஜிநாமா செய்துள்ள இந்த சூழலில் பொலிவியா மக்கள் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும். புதிதாக தோ்தல் நடைபெறுவதற்கான பணிகளில் அந்நாட்டு அரசியல் தலைவா்கள் கவனம் செலுத்த வேண்டும். அந்நாட்டில் நடைபெறும் தோ்தலைக் கண்காணிப்பதற்காக அமெரிக்க தோ்தல் கண்காணிப்பு நிறுவனம் ஒரு குழுவை அனுப்பி வைக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com