பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் சாதனை:சீன வெளியுறவு அமைச்சர்

கடந்த நவம்பர் 10 முதல் 14-ஆம் நாள் வரை, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் கிரேக்கத்தில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.
பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் சாதனை:சீன வெளியுறவு அமைச்சர்


கடந்த நவம்பர் 10 முதல் 14-ஆம் நாள் வரை, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் கிரேக்கத்தில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, பிரேசிலில் நடைபெற்ற 11ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். ஷிச்சின்பிங்கின் இப்பயணம் குறித்து சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ 14ஆம் நாள் செய்தியாளர்களுக்கு விளக்கினார்.

11ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாடு, உலகப் பொருளாதார வளர்ச்சி மற்றும் உலக அமைப்பு மாற்றத்தின் முக்கிய வேளையில் நடைபெற்றது. இந்நிலையில், ஷிச்சின்பிங் தனது ஆலோசனைகளை முன்வைத்தபோது, அரசியல், பொருளாதாரம் மற்றும் மானிடவியல் துறைகளின் கூட்டு வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார். அதோடு, பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தி, இரண்டாவது “பொற்காலப் பத்தாண்டு” என்ற இலக்கை நனவாக்குவதற்குரிய திசையையும் தெளிவுப்படுத்தியுள்ளதாக வாங்யீ தெரிவித்தார்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com