இலங்கை தேர்தல் நிலவரம்: கோத்தபய ராஜபக்சே முன்னிலை

இலங்கையின் தற்போதைய அதிபர் சிறிசேனவின் பதவிக்காலம் 2020 ஆம் ஆண்டு நிறைவு பெறுகிறது. 
இலங்கை தேர்தல் நிலவரம்: கோத்தபய ராஜபக்சே முன்னிலை


கொழும்பு : இலங்கையின் தற்போதைய அதிபர் சிறிசேனவின் பதவிக்காலம் 2020 ஆம் ஆண்டு நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு நடத்தப்படும் இந்த அதிபர் தேர்தலுக்காக, நாடெங்கும் சுமார் 12 ஆயிரத்து 845 வாக்குச்செலுத்தும் மையங்கள் வாக்கு பதிவு நடைபெற்றது. 

இதுவரை இல்லாத எண்ணிக்கையில் 35  வேட்பாளர்கள் போட்டியிடும் இந்தத் தேர்தலின் பூர்வாங்க முடிவுகள் சனிக்கிழமை நள்ளிரவு முதல் வெளியாகும். இறுதி முடிவுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

இலங்கை அதிபர் தேர்தலைப் பொருத்தவரை, தாங்கள் விரும்பும் வேட்பாளராக முதலாவது, இரண்டாவது, மூன்றாவது என 3 பேரை வாக்காளர்களால் தெரிவு செய்ய முடியும். முதல் தெரிவிலேயே 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை ஒரு வேட்பாளர் பெற்றுவிட்டால், அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். அத்தகைய பெரும்பான்மையை யாரும் பெறாவிட்டால், வாக்காளர்களின் இரண்டாவது தெரிவை அடிப்படையாகக் கொண்டு வெற்றி நிர்ணயிக்கப்படும். அதைப் பொருத்து, தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதமாகும் என்று கூறப்படுகிறது.

இலங்கையின் அடுத்த அதிபர் தேர்தல் முடிந்து ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் கோத்தபய ராஜபக்சே 3,45,867 வாக்குகள் பெற்று முன்னிலை வகுக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com