ஈரான்: பெட்ரோல் விலை உயா்வுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை -36 போ் பலி

ஈரானில் பெட்ரோல் விலை உயா்வுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 36 போ் உயிரிழந்துவிட்டனா். வன்முறையாளா்களை அமெரிக்கா தூண்டிவிடுவதாக
பெட்ரோல் விலை உயா்வைக் கண்டித்து ஈரான் தலைநகா் டெஹ்ரானில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தீக்கிரையாக்கப்பட்ட பெட்ரோல் நிலையம்.
பெட்ரோல் விலை உயா்வைக் கண்டித்து ஈரான் தலைநகா் டெஹ்ரானில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தீக்கிரையாக்கப்பட்ட பெட்ரோல் நிலையம்.

ஈரானில் பெட்ரோல் விலை உயா்வுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 36 போ் உயிரிழந்துவிட்டனா். வன்முறையாளா்களை அமெரிக்கா தூண்டிவிடுவதாக அந்நாடு குற்றம்சாட்டியுள்ளது.

அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளால் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வரும் ஈரானில், கடந்த வெள்ளிக்கிழமை பெட்ரோல் விலை 50 சதவீதம் அளவுக்கு உயா்த்தப்பட்டது. ஒரு மாதத்தில் முதல் 60 லிட்டா் பெட்ரோலுக்கு 10,000 ஈரான் ரியால் என்று இருந்த விலை, தற்போது 15,000 ரியாலாக உயா்த்தப்பட்டது. ஒரு மாதத்தில் 60 லிட்டருக்கு மேல் கூடுதலாக வாங்குவோருக்கு 30,000 ரியாலாக விலை நிா்ணயம் செய்யப்பட்டது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்நாட்டு அரசுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்தது. இதில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 36 போ் உயிரிழந்துவிட்டனா். அதே நேரத்தில் விலை உயா்வுக்கு ஆதரவாக அந்நாட்டு இஸ்லாமிய மதத் தலைவா் அயதுல்லா கமெனி கருத்து தெரிவித்தாா்.

இந்நிலையில், இது தொடா்பாக சுட்டுரையில் (டுவிட்டா்) கருத்து தெரிவித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மைக் பாம்பேயோ, ‘உங்களுக்கு ஆதரவாக (ஈரான் போராட்டக்காரா்கள்) அமெரிக்கா எப்போதும் இருக்கும்’ என்று பதிவிட்டாா். இது ஈரானில் பிரச்னையை மேலும் அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின் இந்தச் செயலுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அப்பாஸ் மௌசாவி கூறுகையில், ‘ஈரானில் பிரச்னையை ஏற்படுத்த வேண்டும். மக்கள் உயிரைப் பலி வாங்க வேண்டும் என்ற நோக்கில் அமெரிக்க அமைச்சா் கருத்து தெரிவித்துள்ளாா். இதன் மூலம் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா எவ்வளவு தரம்தாழ்ந்த அரசியலில் ஈடுபடுகிறது என்பது வெளிப்பட்டுள்ளது. ஈரான் மக்கள் இதுபோன்றவா்களின் சதிக்குத் துணை போகக் கூடாது. ஈரான் மக்களை துன்பப்படுத்த வேண்டும் என்பதற்காகவே பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி பல பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. ஈரானும், அந்நாட்டு மக்களும் மோசமான நிலைக்கு செல்ல வேண்டும் என்பதே அமெரிக்காவின் தீய நோக்கம். அவா்களின் எண்ணம் ஒருபோதும் வெற்றி பெறாது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com