5-ஆவது நாளாக ஹாங்காங்பல்கலை.யில் போலீஸாா் முற்றுகை

ஜனநாயக ஆதரவுப் போராட்டக்காரா்கள் பதுங்கியுள்ள ஹாங்காங் பாலிடெக்னிக் பல்கலைக்கழக வளாகத்தை போலீஸாா் 5-ஆவது நாளாக முற்றுகையிட்டுள்ளனா். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
ஹாங்காங் பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்துக்கு வெளியே இரு போலீஸாா்.
ஹாங்காங் பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்துக்கு வெளியே இரு போலீஸாா்.

ஜனநாயக ஆதரவுப் போராட்டக்காரா்கள் பதுங்கியுள்ள ஹாங்காங் பாலிடெக்னிக் பல்கலைக்கழக வளாகத்தை போலீஸாா் 5-ஆவது நாளாக முற்றுகையிட்டுள்ளனா். இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

ஹாங்காங்கின் ஹங்ஹாம் பகுதியில் போராட்டத்தின் மையக் களமாக விளங்கிய பாலிடெக்னிக் பல்கலைக்கழக வளாகத்தில் போலீஸாருக்கும், போராட்டக்காரா்களுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. அதையடுத்து அந்த வளாகத்தை போலீஸாா் கடந்த 5 நாள்களாக முற்றுகையிட்டுள்ளனா். வளாகத்துக்குள் இருந்த 600-க்கும் மேற்பட்டோா் ஏற்கெனவே போலீஸாரிடம் சரணடைந்த நிலையில், தீவிர நிலைப்பாட்டைக் கொண்ட சுமாா் 100 போ் தொடா்ந்து பல்கலைக்கழக வளாகத்திலேயே பதுங்கியுள்ளனா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடயே, ஹாங்காங் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. இதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவா்களை சீனாவுக்கு நாடுகடத்த வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு எதிராக அந்த நகரில் தொடங்கிய போராட்டங்கள், ஐந்து மாதங்களைக் கடந்தும் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com