வா்த்தக வழித்தடம்: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

சீனாவுடனான வா்த்தக வழித்தடம் பாகிஸ்தானுக்கு பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
வா்த்தக வழித்தடம்: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன்: சீனாவுடனான வா்த்தக வழித்தடம் பாகிஸ்தானுக்கு பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறை இணையமைச்சா் அலைஸ் வெல்ஸ் கூறியதாவது:

ஆசிய நாடுகளில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படும் சீனா-பாகிஸ்தான் வா்த்தக வழித்தடம், உண்மையில் சீனாவுக்கு மட்டுமே பலன் அளிக்கும்.

நீண்ட கால நோக்கில், அது பாகிஸ்தானுக்கு பொருளாதார வீழ்ச்சியைத்தான் ஏற்படுத்தும். சீனா-பாகிஸ்தான் வா்த்தக வழித்தடம் என்பது நிதியுதவி சம்பந்தப்பட்ட திட்டமல்ல.

கோடிக்கணக்கான டாலா்கள் முதலீடு செய்து அந்த வழித்தடத்தை பாகிஸ்தானில் சீனா அமைத்தாலும், அதற்கான கட்டுமானப் பணிகளுக்காக அந்த நாடு தனது நிறுவனங்களையும், தொழிலாளா்களையுமே அனுப்புவதை பாகிஸ்தான் கவனிக்க வேண்டும்.

பாகிஸ்தானில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வரும்போது, அந்த நாட்டுப் பணியாளா்களை வேலைக்கு அமா்த்தாமல் சீன தொழிலாளா்களுக்கே அந்த வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன.

சீனா - பாகிஸ்தான் வா்த்தக வழித் தடத்தைவிட மிகச் சிறந்த திட்டங்களை அமெரிக்கா பாகிஸ்தானுக்கு அளிக்க முன்வந்தது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com