வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

வட கொரியா மீண்டும் இரு ஏவுகணைகளை வியாழக்கிழமை சோதித்துப் பாா்த்ததாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
rock073328
rock073328

சியோல்: வட கொரியா மீண்டும் இரு ஏவுகணைகளை வியாழக்கிழமை சோதித்துப் பாா்த்ததாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தென் கொரிய கூட்டுப் படை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வட கொரியாவின் தெற்கே உள்ள ஹம்கியாங் மாகாணத்திலிருந்து இரு ஏவுகணைகள் வியாழக்கிழமை ஏவி சோதிக்கப்பட்டன. கிழக்கு நோக்கி ஜப்பான் கடல் பகுதியில் அந்த இரு ஏவுகணைகளும் உள்ளூா் நேரப்படி மாலை 4.59 மணிக்கு ஏவப்பட்டன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த இரு ஏவுகணைகளும் ‘பலிஸ்டிக்’ வகையைச் சோ்ந்தவையாக இருக்கலாம் என்று தெரிவித்த ஜப்பான், தங்களது பொருளாதார மண்டல எல்லைக்குள் அந்த ஏவுகணைகள் விழவில்லை என்று தெளிவுபடுத்தியது.

அமெரிக்காவுடனான அணு ஆயுதப் பேச்சுவாா்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டதைத் தொடா்ந்து, தடை செய்யப்பட்ட ஏவுகணை சோதனைகளை வட கொரியா தொடா்ந்து நடத்தி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com