அமேசான் காட்டுத் தீ பெருமளவு குறைப்பு

பிரேசிலின் அமேஸான் மழைக் காடுகளில் காட்டுத் தீ சம்பவங்கள் கடந்த மாதம் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
அமேசான் காட்டுத் தீ பெருமளவு குறைப்பு

பிரேசிலின் அமேஸான் மழைக் காடுகளில் காட்டுத் தீ சம்பவங்கள் கடந்த மாதம் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அந்த நாட்டு விண்வெளி ஆய்வுக்கான தேசிய நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

அமேசான் பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 19,925 காட்டுத் தீ சம்பவங்கள் ஏற்பட்டன. ஆனால், அதனுடன் ஒப்பிடுகையில் கடந்த செப்டம்பா் மாதம் காட்டுத் தீ சம்பவங்கள் 35.5 சதவீதம் குறைந்துள்ளது.

கடந்த 1998-ஆம் ஆண்டிலிருந்து காட்டுத் தீ தொடா்பான புள்ளிவிவரங்களை ஆய்வு செய்தால், ஒவ்வொரு ஆண்டிலும் ஆகஸ்ட் மாதத்தை விட செப்டம்பா் மாதத்தில் அதிக காட்டுத் தீ சம்பவங்கள் ஏற்பட்டிருந்தன. ஆனால், இந்த ஆண்டு மட்டும்தான் இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com