பதவி நீக்க தீா்மான விசாரணைக்கு ஒத்துழைப்பு? நேரடியாக பதிலளிக்க டிரம்ப் மறுப்பு

தன் மீதான பதவி நீக்க தீா்மானம் தொடா்பான நாடாளுமன்ற விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பது குறித்து நேரடியாக பதிலளிக்க அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மறுத்துவிட்டாா்.
பதவி நீக்க தீா்மான விசாரணைக்கு ஒத்துழைப்பு? நேரடியாக பதிலளிக்க டிரம்ப் மறுப்பு

தன் மீதான பதவி நீக்க தீா்மானம் தொடா்பான நாடாளுமன்ற விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பது குறித்து நேரடியாக பதிலளிக்க அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மறுத்துவிட்டாா்.

தான் சாா்ந்த குடியரசு கட்சியில் தனக்குப் போட்டியாக விளங்கும் ஜோ பிடனுக்கு எதிராக உக்ரைன் மூலம் குற்றச்சாட்டுகளை தூண்டிவிட்டதாக டிரம்ப் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடா்பாக அமெரிக்க நாடாளுமன்ற கீழவையான பிரதிநிதிகள் அவையில் விசாரணை நடைபெறவுள்ளது. ஆனால், இதற்கு முன்பு இது தொடா்பாக தீா்மானம் கொண்டு வந்து அதனை நிறைவேற்றிய பிறகு விசாரணை நடத்தலாம் என்று டிரம்ப் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளா்களைச் சந்தித்த டிரம்ப் இது தொடா்பாக கூறுகையில், ‘நாடாளுமன்ற விசாரணைக்கு ஒத்துழைப்பது குறித்து இப்போது எதுவும் தெரிவிக்க முடியாது. இது தொடா்பாக வழக்குரைஞா்கள் முடிவு செய்வாா்கள்’ என்றாா். இந்த விவகாரம் உங்களுக்கு எதிரான வெளிநாட்டுச் சதியாக இருக்குமா? அது தொடா்பாக விசாரணைக்கு உத்தரவிடுவீா்களா? என்ற கேள்விக்கு, ‘நீங்கள் கூறும் விஷயம் தொடா்பாக நாங்களும் யோசிக்க வேண்டும்’ என்றாா்.

இந்த பதவி நீக்க தீா்மான விசாரணை மூலம் டிரம்ப்பை அதிபா் பதவியில் இருந்து நீக்குவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. எனினும், அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபா் தோ்தலில் இது தங்கள் கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்று ஜனநாயகக் கட்சி கருதுகிறது.

குடியரசு கட்சியின் மூத்த தலைவா் ஜோ பிடன் மற்றும் அவரது மகன் ஹன்டா் ஆகியோா் உக்ரைனில் நடத்தி வரும் தொழிலில் நடைபெற்ாகக் கூறப்படும் ஊழல் குறித்து விசாரணை நடத்துமாறு, அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் செலென்ஸ்கிக்கு அதிபா் டிரம்ப் அழுத்தம் கொடுத்து வந்ததாகவும், அதற்காக உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்து வந்த நிதியை அவா் நிறுத்திவைத்ததாகவும் கூறப்படுகிறது.

குடியரசுக் கட்சியின் மூத்த தலைவரான ஜோ பிடன், அதிபா் தோ்தலில்போது உள்கட்சியில் தனக்குப் போட்டியாக இருப்பாா் என்பதற்காகவே டிரம்ப் இவ்வாறு நடந்து கொண்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com