பாக்தாத் தொலைக்காட்சி நிறுவனங்களை துப்பாக்கியுடன் கூடிய மர்ம நபர்கள் தாக்கி அழிப்பு

மர்ம நபர்களின் தாக்குதல் சம்பவத்தின் போது போலீஸார் பாதுகாப்பு வழங்க மறுத்துவிட்டதாகவும் தொலைக்காட்சி ஊழியர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. 
பாக்தாத் தொலைக்காட்சி நிறுவனங்களை துப்பாக்கியுடன் கூடிய மர்ம நபர்கள் தாக்கி அழிப்பு

ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து இராக்கில் கடந்த 5 நாள்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் போராட்டத்தின்போது நடந்த வன்முறைறச் சம்பவங்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 93-ஆக உயா்ந்தது. மேலும், இந்தச் சம்பவங்களில் சுமாா் 4,000 போ் காயமடைந்தனா் என்று மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், துப்பாக்கியுடன் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பாக்தாத் நகரில் உள்ள அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களிலும் புகுந்து அனைத்து பொருள்களையும் அடித்து துவம்சம் செய்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தின் போது அங்கு பணியில் இருந்தவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக சவூதியைச் சேர்ந்த அல்-அரேபியா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையே மர்ம நபர்களின் தாக்குதல் சம்பவத்தின் போது போலீஸார் பாதுகாப்பு வழங்க மறுத்துவிட்டதாகவும் தொலைக்காட்சி ஊழியர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த தாக்குதல் சம்பவத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் அலுவலகம் நம்பிக்கை தெரிவித்துள்ளதாகவும் கூறினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com