"நீட் தேர்வு வேண்டாம்" என ஐ.நா.வில் முழங்கிய தமிழச்சி..!
By C.P.சரவணன், வழக்குரைஞர் | Published on : 07th October 2019 01:30 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

நீட் தேர்வு வேண்டாம் என ஐ.நா.வில் பேசிவிட்டு தமிழகம் திரும்பி இருக்கும், பட்டதாரி பெண்ணுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
நீட் தேர்வு வேண்டாம் என ஐ.நா.வில் பேசிவிட்டு தமிழகம் திரும்பி இருக்கும், பட்டதாரி பெண்ணுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அவரது எதிர்கால கனவும், லட்சியமும் குறித்து ஓர் பார்வை...
மதுரை மாவட்டம் இளமனூர் அடுத்த கார்சேரி கிராமத்தைச் சேர்ந்த பிரேமலதா, ஐ.நா.வில் பேசி திரும்பிய இளங்கலை பட்டதாரி. புதர் மண்டிய தரிசுக்காட்டில் நீண்டு கிடக்கும் ஒற்றை அடி பாதை வழி நடந்தால், தன்னந்தனியாக, ஊருக்கு வெளியே நிற்கும் அவரது வீட்டுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது.
இளமனூரில் உள்ள அரசு ஆதிதிராவிட பள்ளியில் படித்த பிரேமலதா, மனித உரிமை குறித்த ஆவணப் படம் ஒன்றில் பேசியிருக்கிறார். அதன் தாக்கம் ஐ.நா.-வில் பேசும் வாய்ப்பை கொடுத்திருக்கிறது.
ஜெனீவா சென்ற பிரேமலதா, தமிழகத்தில் உள்ள கல்வி முறை, சாதிய ஒடுக்குமுறை, நீட் தேர்வு, அனிதாவின் மரணம் பற்றி பேசியுள்ளார்.
தான் படித்த மனித உரிமைக் கல்வியை, அனைத்து பாடப்பிரிவு மாணவர்களுக்கும், தமிழக அரசு பாடத்தில் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தும் பிரேமலதா, சட்டம் படிப்பதே தமது லட்சியம் என்கிறார்.