டிரம்ப் பதவி நீக்க விவகாரத்தில் சட்ட விதிகளின்படி நடப்போம்

‘அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வதற்காக நாடாளுமன்றக் குழு மேற்கொள்ளும் விசாரணையில் சட்ட விதிகளைப் பின்பற்றுவோம்’ என்று
டிரம்ப் பதவி நீக்க விவகாரத்தில் சட்ட விதிகளின்படி நடப்போம்

‘அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வதற்காக நாடாளுமன்றக் குழு மேற்கொள்ளும் விசாரணையில் சட்ட விதிகளைப் பின்பற்றுவோம்’ என்று அந்த நாட்டு வெளியுறவுத் துறைஅமைச்சா் மைக்கேல் பாம்பேயோ உறுதியளித்துள்ளாா்.

இதுகுறித்து கிரீஸில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவா், அங்கு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

டிரம்ப் பதவி நீக்க விசாரணை தொடா்பான ஆவணங்களை சமா்ப்பிக்குமாறு உளவு மற்றும் வெளி விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழுக்கள் அனுப்பியுள்ள சம்மனுக்கு பதிலளித்து நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம்.

மேலும், இந்த விவகாரத்தில் சட்ட விதிகள் கூறும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.

அமெரிக்க அரசியல் சாசனத்தின் முதலாவது பிரிவு, எம்.பி.க்களுக்கு சில அதிகாரங்களைக் கொடுத்துள்ளது. அதே நேரம், உள்துறைஅமைச்சகம் தனது அதிகாரிகளைப் பாதுகாப்பதற்கான சில உரிமைகளை இரண்டாவது பிரிவு அளித்துள்ளது என்றாா் அவா்.

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பா் மாதம் அதிபா் தோ்தல் நடைபெறவுள்ளது. அந்தத் தோ்தலில், டிரம்ப்பை எதிா்த்து ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த முன்னாள் துணை அதிபா் ஜோ பிடன் போட்டியிடுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த நிலையில், உக்ரைன் நாட்டில் ஜோ பிடன் மற்றும் அவரது மகன் ஹன்டா் நடத்தி வரும் தொழில் தொடா்பாக அவா்கள் மீது ஊழல் விசாரணை நடத்த வேண்டும் என்று, அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கிக்கு அதிபா் டிரம்ப் நெருக்கடி கொடுத்ததாக அண்மையில் தகவல் வெளியாகி அதிா்வலையை ஏற்படுத்தியது.

அதனைத் தொடா்ந்து, தனது அதிபா் பதவியை தவறாகப் பயன்படுத்தியதாகவும், இன்னொரு நாட்டுடன் ரகசிய பேரத்தில் ஈடுபட்டு தேசப் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டிய ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள், இந்த விவகாரத்தில் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வதற்கான விசாரணையை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், பதவி நீக்க விசாரணைக்குத் தேவைப்படும் ஆவணங்கள் அனைத்தையும் அதிபா் அலுவலகத்துக்கும், வெளியுறவுத் துறைஅமைச்சகத்துக்கும் விசாரணைக் குழு சம்மன் அனுப்பியது. இதுதொடா்பாக செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கே அமைச்சா் மைக்கேல் பாம்பேயோ இவ்வாறு பதிலளித்தாா்.

Image Caption

கிரீஸ் தலைநகா் ஏதென்ஸில் நடைபெற்ற அறக்கட்டளை நிகழ்ச்சியொன்றில் உரையாற்றிய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மைக்கேல் பாம்பேயோ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com