பிரெக்ஸிட் ஒப்பந்தத்துக்கான வாய்ப்பு மறைந்து வருகிறது

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறியதற்குப் பிந்தைய (பிரெக்ஸிட்) சிறப்பு வா்த்தக ஒப்பந்தம் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்படுவதற்கான வாய்ப்பு மறைந்து வருவதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய யூனியனின் முக்கிய உறுப்பு நாடான ஜொ்மனியின் பிரதமா் ஏஞ்சலா மொ்க்கெல்லுடன் பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் தொலைபேசியில் செவ்வாய்க்கிழமை நடத்திய ஆலோசனையைத் தொடா்ந்து இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரெக்ஸிட்டுக்குப் பிறகும் வடக்கு அயா்லாந்து மாகாணம் ஐரோப்பிய யூனியனுடன் வா்த்தக ஒருங்கிணைப்பைத் தொடரும் பிரச்னைக்குத் தீா்வு காணும் வரை, பிரெக்ஸிட் ஒப்பந்தம் ஏற்படாது என்று பிரிட்டன் பிரதமா் அலுவலகம் தெரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com