128 சீன-இந்திய வர்த்தகத் திட்டப்பணிகள் கையொப்பம்

மொத்தம் 128 வர்த்தக ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டன. இந்த ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு ரூ.300 கோடி அமெரிக்க டாலருக்கும் அதிகமாகும். 
128 சீன-இந்திய வர்த்தகத் திட்டப்பணிகள் கையொப்பம்

சீன வணிக அமைச்சகமும் இந்திய வணிக மற்றும் தொழில் துறை அமைச்சகமும் 10-ஆம் நாள் புது தில்லியில், சீன-இந்திய வர்த்தகத் திட்டப்பணிகள் கையொப்பமிடல் விழாவைக் கூட்டாக நடத்தின.

சீன வணிக அமைச்சகத்தின் அதிகாரி லியூ ச்சாங் யூ இவ்விழாவில் கூறுகையில், மொத்தம் 300 கோடி மக்கள் தொகை கொண்ட மாபெரும் சந்தை, நீண்டகாலமாக இரு நாடுகளுக்கிடை பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக்கு அடிப்படையாக உள்ளது. இச்சந்தை, உலகப் பொருளாதார வளர்ச்சிக்கும் உயிராற்றலாகத் திகழும் என்பது உறுதி என்று தெரிவித்தார்.

இந்திய வணிக மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் செயற்குழு உறுப்பினர் ஒருவர் கூறுகையில், சீனா என்பது, சாதகமான வாய்ப்புகளைத்தான் கொண்டு வருமே தவிர, அச்சுறுத்தல் அல்ல என்று இந்தியத் தொழில் துறை பொதுவாகக் கருதி வருகிறது. இந்திய-சீன பொருளாதார மற்றும் வர்த்தக உறவு, பெரும் வளர்ச்சியை எதிர்நோக்கியுள்ளது என்று தெரிவித்தார்.

இரு நாட்டுத் தொழில் நிறுவனங்கள், மொத்தம் 128 வர்த்தக ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டன. இந்த ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு ரூ.300 கோடி அமெரிக்க டாலருக்கும் அதிகமாகும். 

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com