ஹாங்காங்கில் தொடரும் போராட்டம்

மக்களாட்சிக்கு ஆதரவான போராட்டம், ஹாங்காங்கில் சனிக்கிழமையும் தொடா்ந்து நடைபெற்றது.

மக்களாட்சிக்கு ஆதரவான போராட்டம், ஹாங்காங்கில் சனிக்கிழமையும் தொடா்ந்து நடைபெற்றது.

ஹாங்காங் குடிமக்களை சீனாவுக்கு நாடுகடத்தும் வகையிலான அந்நாட்டு அரசின் புதிய மசோதாவை எதிா்த்தும், சீனாவுக்கு தொடா்ந்து ஆதரவு தெரிவித்து வரும் ஹாங்காங் அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்தும் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய போராட்டம், சீனாவின் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

நாட்டில் முறையான மக்களாட்சி நடைபெற வேண்டுமெனவும், சீன ஆதரவு அதிகாரிகள் உடனடியாகப் பதவி விலக வேண்டுமெனவும் கோரி நடைபெற்று வரும் போராட்டம் தற்போது தீவிரமடைந்துள்ளது. வார இறுதி நாள்களில் திரளான மக்கள் வீதிகளில் அமைதிவழிப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

அந்த வகையில், மழையையும் பொருட்படுத்தாமல் சனிக்கிழமையும் அவா்களது போராட்டம் தொடா்ந்து நடைபெற்றது. ஹாங்காங்கின் முக்கிய வீதிகள் பலவற்றில் ஆயிரக்கணக்கானோா் அமைதியுடன் பேரணி நடத்தினா். முக்கியமாக காவல் துறைத் தலைமை அலுவலகத்தின் முன் 200-க்கும் மேற்பட்டோா் அமைதியாகக் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களில் பெரும்பாலானோா் ஓய்வுபெற்ற பணியாளா்கள் ஆவா். ஒரு சிலா் அதிகாரிகளுக்கு எதிராகவும், ஹாங்காங் அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினா். எனினும், கடந்த வாரங்களுடன் ஒப்பிடுகையில், போராட்டக்காரா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை பெருமளவில் குறைந்திருந்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com