சீன-பிரான்ஸ் அரசுத் தலைவர்கள் தொலைப்பேசி தொடர்பு

சீன அரசுத் தலைவர் ஷி ஜின்பிங் அக். 15-ஆம் நாள், பிரான்ஸ் அரசுத் தலைவர் மெக்ரானுடன் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டார். 
சீன அதிபர் ஷி ஜின்பிங்
சீன அதிபர் ஷி ஜின்பிங்

சீன அரசுத் தலைவர் ஷி ஜின்பிங் அக். 15-ஆம் நாள், பிரான்ஸ் அரசுத் தலைவர் மெக்ரானுடன் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டார். ஷி ஜின்பிங் கூறுகையில், நவ சீனா நிறுவப்பட்ட 70-ஆம் ஆண்டு நிறைவுக்கு உற்சாகமான வாழ்த்துச் செய்தி அனுப்பியதற்கு நன்றி. 

ஒன்றுக்கொன்று நலன் தந்து, கூட்டாக வெற்றி பெறும் நெடுநோக்குத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தி, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மக்களுடன் இணைந்து, மனித குலத்தின் பொது சமூக உருவாக்கத்தைத் தூண்ட சீனா விரும்புகிறது என்று தெரிவித்தார்.

மெக்ரான் கூறுகையில், பல்வேறு துறைகளில் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை ஆழமாக்கி, பல தரப்புவாதத்தைக் கூட்டாக வளர்த்து, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் முதலிய முக்கியமான சர்வதேசப் பிரச்சினைகளைச் சமாளிக்க, பிரான்ஸ் சீனாவுடன் கைகோர்த்துப் பாடுபட விரும்புகிறது என்று குறிப்பிட்டார்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com