சீனாவை அடையாளப்படுத்தும் மூன்று துறைகள்: உலகளாவிய ஆய்வு தகவல்!

சீனத் தேசிய பிம்பம் குறித்த 2018-ம் ஆண்டு உலகளாவிய ஆய்வு அறிக்கையின் சீனம் மற்றும் ஆங்கிலப் பதிப்புகள் அக்டோபர் 18ஆம் நாள் வெள்ளிக்கிழமை பெய்ஜிங்கில் வெளியிடப்பட்டன.
சீனாவை அடையாளப்படுத்தும் மூன்று துறைகள்: உலகளாவிய ஆய்வு தகவல்!

பெய்ஜிங்: சீனத் தேசிய பிம்பம் குறித்த 2018-ம் ஆண்டு உலகளாவிய ஆய்வு அறிக்கையின் சீனம் மற்றும் ஆங்கிலப் பதிப்புகள் அக்டோபர் 18ஆம் நாள் வெள்ளிக்கிழமை பெய்ஜிங்கில் வெளியிடப்பட்டன. சீனா கலந்துகொண்டுள்ள அனைத்து துறைகளிலும், அறிவியல் தொழில்நுட்பம், பொருளாதாரம், பண்பாடு ஆகிய மூன்று துறைகள் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை தொடர்பான கருத்துக் கணிப்பில், உலகின் 22 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அவர்களில் 50 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் மேற்கூறிய மூன்று துறைகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

சீனாவின் ஒட்டுமொத்த பிம்பம் குறித்த நல்ல எண்ணம் தொடர்ந்து நிலைத்துவருவதோடு, வளரும் நாடுகளிலேயே படிப்படியாக உயர்ந்துவருகிறது. சீனாவின் அறிவியல் தொழில்நுட்பச் சாதனைகளில், அதிவிரைவு தொடர்வண்டி, வெளிநாடுகளில் மிக அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. அதனை அடுத்து, மீத்திறன் கணினி மற்றும் மனிதர்களை ஏற்றிச்செல்லும் விண்வெளித் தொழில்நுட்பம் இடம் வகித்துள்ளன என்று இந்த ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 65 விழுக்காட்டினர், சீனாவின் சர்வதேச தகுநிலை மற்றும் உலகளாவிய செல்வாக்கு தொடர்ந்து மேம்பட்டு வருகிறது என்று கருத்துத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com