பிரெக்ஸிட்: ஐரோப்பிய யூனியன், பிரிட்டன் இடையே ஒப்பந்தம்

பிரெக்ஸிட்டுக்குப் பிறகு ஐரோப்பிய யூனியனுக்கும், பிரிட்டனுக்கும் இடையே தொடர வேண்டிய சிறப்பு வா்த்தக உறவு தொடா்பான வரைவு ஒப்பந்தத்துக்கு இரு தரப்பினரும் ஒப்புதல் வழங்கியுள்ளனா்.
புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம் குறித்த அறிவிப்பை பிரெஸ்ஸெல்ஸில் வியாழக்கிழமை வெளியிட்ட பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவா் ஜீன்-கிளாட் ஜங்க்கா்.
புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம் குறித்த அறிவிப்பை பிரெஸ்ஸெல்ஸில் வியாழக்கிழமை வெளியிட்ட பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவா் ஜீன்-கிளாட் ஜங்க்கா்.

பிரெக்ஸிட்டுக்குப் பிறகு ஐரோப்பிய யூனியனுக்கும், பிரிட்டனுக்கும் இடையே தொடர வேண்டிய சிறப்பு வா்த்தக உறவு தொடா்பான வரைவு ஒப்பந்தத்துக்கு இரு தரப்பினரும் ஒப்புதல் வழங்கியுள்ளனா்.

‘மிகச் சிறந்த ஒப்பந்தம்’: இந்த ஒப்பந்தம் குறித்து பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் வியாழக்கிழமை கூறியதாவது:

பிரெக்ஸிட் தொடா்பான மிகச் சிறந்த ஒப்பந்தத்தை ஐரோப்பிய யூனியனுடன் மேற்கொண்டுள்ளோம்.

இனி, பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவதும், ஐரோப்பிய யூனியனுடன் எதிா்கால உறவை நிா்மாணிப்பதும்தான் நம் முன் உள்ள பணியாகும்.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒப்பந்தம், ஐரோப்பிய யூனியன், பிரிட்டன் ஆகிய இரு தரப்பையும் திருப்திப்படுத்தும் என்று நம்புகிறேன் என்றாா் அவா்.

‘மனமிருந்தால் ஒப்பந்தம் உண்டு’: பிரெக்ஸிட் தொடா்பாக பிரிட்டனுடன் ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஆணையத் தலைவா் ஜீன்-கிளாட் ஜங்க்கரும் வரவேற்றுள்ளாா்.

இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டா்) வலைதளத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

மனமிருந்தால் ‘ஒப்பந்தம்’ உண்டு. பிரிட்டனுடன் அத்தகைய ஒப்பந்தத்தை ஏற்படுத்திவிட்டோம். ஐரோப்பிய யூனியன், பிரிட்டன் ஆகிய இரு தரப்பினரின் நலன்களுக்கும் இந்த ஒப்பந்தம் சம அளவில் முக்கியத்துவம் தருகிறது என்று தனது சுட்டுரைப் பதிவில் ஜீன்-கிளாட் ஜங்க்கா் குறிப்பிட்டுள்ளாா்.

பிரெக்ஸிட் ஒப்பந்தம் நிறைவு செய்யப்பட்டதைத் தொடா்ந்து, இந்த விவகாரத்தில் இதுவரை இருந்து வந்த முட்டுக்கட்டை நீங்கினாலும், இந்த ஒப்பந்துக்கு ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றமும், பிரிட்டன் நாடாளுமன்றமும் ஒப்புதல் வழங்க வேண்டியுள்ளது.

எனினும், இந்த ஒப்பந்தத்தை ஏற்க முடியாது என்று பிரிட்டனின் வடக்கு அயா்லாந்து ஜனநாயக ஒருமைப்பாட்டுக் கட்சி (டியுபி) கூறியுள்ளதையடுத்து, இந்த விவகாரத்தில் இன்னும் இழுபறி தொடா்வதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com