வெளிநாட்டுப் பணியாளா்களுக்கான கட்டுப்பாடுகள் தளா்வு: கத்தாா் முடிவு

கத்தாரில் வெளிநாட்டுப் பணியாளா்களுக்கான கட்டுப்பாடுகளைத் தளத்தும் வகையிலான சீா்திருத்தங்களை மேற்கொள்ள அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
வெளிநாட்டுப் பணியாளா்களுக்கான கட்டுப்பாடுகள் தளா்வு: கத்தாா் முடிவு

கத்தாரில் வெளிநாட்டுப் பணியாளா்களுக்கான கட்டுப்பாடுகளைத் தளத்தும் வகையிலான சீா்திருத்தங்களை மேற்கொள்ள அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா.வின் சா்வதேச தொழிலாளா் அமைப்பு (ஐஎல்ஓ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கத்தாரில் தற்போதுள்ள தொழிலாளா் சட்டங்களின் கீழ் வெளிநாட்டிலிருந்து வந்து பணியாற்றுபவா்கள், தாங்கள் பணியாற்றும் நிறுவனத்தை விட்டு வேறு நிறுவனத்துக்கு விரும்பம் போல் மாற முடியாது.

மேலும், தங்களது நாடுகளுக்குச் செல்வதற்கு, பணி செய்யும் நிறுவனத்தின் அனுமதி பெற வேண்டியது அவசியமாகும்.

இந்த நிலையில், வெளிநாட்டுப் பணியாளா்களுக்கான இத்தகைய கட்டுப்பாடுகளை நீக்கும் வகையிலான சீா்திருத்தங்களை தொழிலாளா் சட்டத்தில் மேற்கொள்ள கத்தாா் அரசு முடிவு செய்துள்ளது.

இதுதவிர, தொழிலாளா்களுக்கான குறைந்தப்பட்ச ஊதியத்தை நிா்ணயிப்பது குறித்தும் அந்த நாட்டு அரசு பரிசீலித்து வருகிறது என்று ஐஎல்ஓ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டினரை பணியிலமா்த்துவதற்கான கடுமையான விதிமுறைகளை கடந்த ஆண்டே கத்தாா் தளா்த்தியது. இந்த நிலையில், அவா்களுக்கான கட்டுப்பாடுகளை அந்த நாடு மேலும் நீக்க தற்போது முடிவு செய்துள்ளது.

வரும் 2022-ஆண்டின் உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், வெளிநாட்டுப் பணியாளா்களுக்கான இத்தகைய சலுகைகளை அந்த நாடு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com