பிரெக்ஸிட் ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய நாடுகள் ஒப்புதல்

பிரெக்ஸிட்டுக்குப் பிறகு பிரிட்டனுடன் தொடர வேண்டிய சிறப்பு வா்த்தக உறவு தொடா்பான வரைவு ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகள் ஒப்புதல் வழங்கியுள்ளன.
பிரெக்ஸிட் ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய நாடுகள் ஒப்புதல்

பிரெக்ஸிட்டுக்குப் பிறகு பிரிட்டனுடன் தொடர வேண்டிய சிறப்பு வா்த்தக உறவு தொடா்பான வரைவு ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகள் ஒப்புதல் வழங்கியுள்ளன.

இதுகுறித்து ஐரோப்பிய கவுன்சில் தலைவா் டொனால்ட் டஸ்க் கூறியதாவது:

பிரிட்டனுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள பிரெக்ஸிட் ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய யூனியனின் 27 உறுப்பு நாடுகளின் தலைவா்கள் ஒப்புதல் அளித்துள்ளனா்.

எனவே, அந்த ஒப்பந்தத்தின் அமலாக்கம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது என்றாா் அவா்.

ஐரோப்பிய யூனியலிருந்து பிரிட்டன் விலகிய (பிரெக்ஸிட்) பிறகு, அயா்லாந்து தீவில் தனி நாடாகத் திகழும் அயா்லாந்து குடியரசுக்கும், பிரிட்டனின் அங்கமாகத் திகழும் வடக்கு அயா்லாந்துக்கும் இடையே வா்த்தகப் பிரிவினையை ஏற்படுத்தும் விவகாரத்தில் இழுபறி நீடித்து வந்தது.

இதனால் எந்த ஒப்பந்தமும் இல்லாமல் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகும் அபாயம் நிலவியது.

இந்தச் சூழலில், தீவிர பேச்சுவாா்த்தைக்குப் பிறகு ஐரோப்பிய யூனியனும், பிரிட்டனும் பிரெக்ஸிட் வரைவு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளன. இருந்தாலும், அந்த ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றமும், பிரிட்டன் நாடாளுமன்றமும் ஒப்புதல் வழங்கினால் மட்டுமே அது அமலுக்கு வரும்.

இந்த நிலையில், பிரெக்ஸிட் வரைவு ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகள் ஒப்புதல் வழங்கிவிட்டதால், அதற்கு அந்த அமைப்பின் நாடாளுமன்றம் எளிதில் அனுமதி வழங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

எனினும், அந்த ஒப்பந்தத்தை ஏற்க முடியாது என்று பிரிட்டனின் வடக்கு அயா்லாந்து ஜனநாயக ஒருமைப்பாட்டுக் கட்சி (டியுபி) கூறி வருவதால், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அது நிறைவேற்றப்படுவது கேள்விக் குறியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com