கதலோனிய பிரச்சினையில் மேலை நாடுகள் இரட்டை வரையறை!

ஸ்பெய்னின் கதலோனிய தன்னாட்சிப் பிரதேசம், 2017ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில், ஸ்பெய்னின் அரசியல் அமைப்பு சட்டத்தை மீறி, சுதந்திரம் பற்றிய பொது மக்கள் வாக்கெடுப்பை நடத்தியது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்


ஸ்பெய்னின் கதலோனிய தன்னாட்சிப் பிரதேசம், 2017ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில், ஸ்பெய்னின் அரசியல் அமைப்பு சட்டத்தை மீறி, சுதந்திரம் பற்றிய பொது மக்கள் வாக்கெடுப்பை நடத்தியது. 

ஸ்பெயின் அரசு, 2017ஆம் ஆண்டு அக்டோபர் பிற்பாதியில், இப்பிரதேசத்தின் தன்னாட்சி உரிமையை நீக்கியுள்ளது. இத்திங்கள் 14ஆம் நாள், ஸ்பெயின் மிக உயர்நிலை நீதிமன்றம், கதலோனிய தன்னாட்சிப் பிரதேசத்தின் முன்னாள் துணைத் தலைவர் ஓரெல் ஹுன்க்லாஸ் உள்ளிட்ட 9 சுதந்திரம் பற்றிய பொது மக்கள் வாக்கெடுப்பை ஏற்படுத்திய அதிகாரிகளின் மீது குற்றாஞ்சாட்டியது. 

இதற்கு பிறகு, பார்சிலொனா நகரில், பெருமளவான எதிர்ப்பு நடவடிக்கைகளும் மோதல்களும் ஏற்பட்டன.

தீவிரவாதிகள், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தி  காவல் துறையினரின் மீது தாக்குதல் நடத்தினர். நகரம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டது. காவல் துறையினர் அவர்களிடமிருந்து  ஆயுத வாகனங்கள், மற்றும் தடியடி ஆகியவற்றை பயன்படுத்தி, தப்பித்துள்ளனர்.

இந்த விசயத்தில் பல மேலை நாடுகள், சர்வதேச அமைப்புகள், செய்தி நிறுவனங்கள் ஆகியவை, சீனாவின் ஹாங்காங் மாநகரில் ஏற்பட்ட வன்முறையில் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளித்ததைப் போல் அல்லாமல், சொந்த நலனைக் கருத்தில் கொண்டு அமைதியாக இருப்பதோடு, இரட்டை வரையறைகளில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com