பரம்பரை நோய்களை திருத்தியமைக்கும் பொறிமுறை கண்டுபிடிப்பு

மனிதர்களுக்கு உண்டாகும் பல நோய் நிலைமைகளுக்கு பரம்பரை அலகுகளில் உள்ள குறைபாடுகளும் காரணமாகின்றன. இக்குறைபாடுகள் சந்ததிக்கு சந்ததி கடத்தப்படக்கூடியனவாகும்.
Prime Editing
Prime Editing

மனிதர்களுக்கு உண்டாகும் பல நோய் நிலைமைகளுக்கு பரம்பரை அலகுகளில் உள்ள குறைபாடுகளும் காரணமாகின்றன. இக்குறைபாடுகள் சந்ததிக்கு சந்ததி கடத்தப்படக்கூடியனவாகும். இந்நிலையில் குறித்த குறைபாடுகளை 90 சதவீதம் வெற்றிகரமாக மாற்றயமைக்கக்கூடிய புதிய பொறிமுறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பட்டியலிலுள்ள சுமார் 75000 நோய்களை கட்டுப்படுத்தலாம்.

இது தொடர்பாக அமெரிக்க விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். இதில் முக்கிய விஞ்ஞானி டேவிட் லூ ஆவார். CRISPR–Cas9 எனப்படும் மரபியல் திருத்தம் ஜீன்களை கட்டுப்படுத்துகிறது.

இப்புதிய தொழில்நுட்பமானது Prime Editing என அழைக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் மரபணுக் குறியீடுகளை மாற்றி திரும்ப பதிக்க முடியும் என தெரிவித்துள்ளனர். அத்துடன் இத்தொழில்நுட்பமானது மிகவும் துல்லியமானதாகவும், பல்துறை சார்ந்ததாகவும் இருப்பதாக Broad Institute விஞ்ஞானிகள் குழு மேலும் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com