எளிதில் தீப்பற்றாத லித்தியம் பேட்டரி: அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

செல்லிடப்பேசிகளில் பயன்படுத்தப்படும் லித்தியம்-அயன் பேட்டரிகள் எளிதில் தீப்பிடிக்கும், சூடாகும் என்று புகார்கள் இருந்து வரும் நிலையில்
எளிதில் தீப்பற்றாத லித்தியம் பேட்டரி: அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு


செல்லிடப்பேசிகளில் பயன்படுத்தப்படும் லித்தியம்-அயன் பேட்டரிகள் எளிதில் தீப்பிடிக்கும், சூடாகும் என்று புகார்கள் இருந்து வரும் நிலையில், எளிதில் தீப்பிடிக்காத லித்தியம்-அயன் பேட்டரிகளை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதுதொடர்பாக அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாக்கின்ஸ் இயற்பியல் ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:
இன்றைய காலகட்டத்தில் நாம் பயன்படுத்தும் செல்லிடப்பேசி முதல் கார் வரை அனைத்திலும் பேட்டரி பயன்பாடு உள்ளது. இத்தகைய பேட்டரிகள், மின்னணு சாதனங்களின் ஆற்றல் சேமிப்பு கலனாக இருக்கின்றன. செல்லிடப்பேசிகளில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் லித்தியம்-அயன் பேட்டரிகளின் மூலப்பொருள்கள் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்களாக உள்ளதால், செல்லிடப்பேசிகள் வெடித்து தீ விபத்து ஏற்படும் சம்பவங்கள் நிகழ்வதாக செய்திகள் வருகின்றன. இதுகுறித்து அந்த பேட்டரிகளில் எந்தவித எச்சரிக்கை குறியீடுகளும் வெளியிடப்படுவதில்லை.
இத்தகைய பேட்டரிகளினால், பல செல்லிடப்பேசிகளை விமானங்களில் எடுத்துச் செல்லக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்க கடற்படையில், கப்பல்களில் இ-சிகரெட் எடுத்துச் செல்ல தடை உள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு எளிதில் தீப்பற்ற இயலாத பேட்டரிகளை உருவாக்க எண்ணினோம். 
தற்போது தயாரிக்கப்பட்டுள்ள லித்தியம்-அயன் பேட்டரி மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும். எளிதில் தீப்பற்றாத வேதிப்பொருள்களைக் கொண்டு இந்த பேட்டரி தயாரிக்கப்பட்டுள்ளது. அவற்றை இரண்டாக அறுத்தாலும், தண்ணீருக்குள் மூழ்க வைத்தாலும் எந்த விதப் பிரச்னையும் இல்லை. அவை எளிதில் வெடிக்கவோ, தீப்பிடிக்கவோ செய்யாது என்று கூறினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com