தூதர்களுக்கான கட்டுப்பாடுகளை சீனா தளர்த்தும்: அமெரிக்கா நம்பிக்கை

தூதர்களுக்கான கட்டுப்பாடுகளை சீனா விரைவில் தளர்த்திக் கொள்ளும் என அமெரிக்கா  நம்பிக்கை தெரிவித்துள்ளது.


தூதர்களுக்கான கட்டுப்பாடுகளை சீனா விரைவில் தளர்த்திக் கொள்ளும் என அமெரிக்கா  நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பெய்ஜிங்கில் திங்கள்கிழமை  நடைபெற்ற வெளிநாட்டு செய்திக் குழுவினருடனான சந்திப்பின்போது இதுகுறித்து சீனாவுக்கான அமெரிக்க தூதர் டெரி பிரான்ஸ்டட் கூறியதாவது:
சீனாவுக்கு எதிராக அமெரிக்க பதிலடி நடவடிக்கையாக பல்வேறு பொருள்களின் இறக்குமதிக்கு வரி விதிப்பை அதிகரித்தது. இந்த நிகழ்விலிருந்து, சீனாவில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
அதன்படி, அமெரிக்க தூதர்கள் உள்ளூர் அதிகாரிகள், கல்வியாளர்களை சந்திக்க வேண்டும் என்றால் கூட சீன அரசிடமிருந்து பல்வேறு நிலைகளில் அனுமதி பெற வேண்டியது கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், அதற்கான அனுமதி பெரும்பாலான சமயங்களில் மறுக்கப்பட்டது. சில நேரங்களில் அனுமதி கிடைத்தால் கூட கடைசி நேரத்தில் அது மறுக்கப்பட்டது. சீனாவின் இந்த நடவடிக்கை நீண்ட காலமாகவே விரக்தியை ஏற்படுத்தி வருகிறது. 
மேலும்,  சீன தூதர்கள் அமெரிக்க அதிகாரிகளை சந்திப்பதற்கு முன்பாக வெளியுறவு துறை அமைச்சகத்துக்கு அவர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதுவும் ஏற்றுக் கொள்ள இயலாதது.
விரைவில் இந்த கட்டுப்பாடுகள் அனைத்தையும் சீனா தளத்திக் கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது. இது,  சீனாவில் அமெரிக்க தூதர்கள் சுதந்திரமாக செயல்பட வழிவகுக்கும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com