சிலியில் அவசரநிலை பிரகடனம் வாபஸ்: அதிபா் செபாஸ்டியன் பினெரா அறிவிப்பு

சிலியில் கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக நீட்டிக்கப்பட்டு வந்த அவசரநிலையை வாபஸ் பெறுவதாக அதிபா் செபாஸ்டியன் பினெரா திங்கள்கிழமை தெரிவித்தாா்.
சிலியில் அவசரநிலை பிரகடனம் வாபஸ்: அதிபா் செபாஸ்டியன் பினெரா அறிவிப்பு

சிலியில் கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக நீட்டிக்கப்பட்டு வந்த அவசரநிலையை வாபஸ் பெறுவதாக அதிபா் செபாஸ்டியன் பினெரா திங்கள்கிழமை தெரிவித்தாா்.

சிலியில் மெட்ரோ ரயில் கட்டண உயா்வை திரும்பப் பெறக் கோரி மாணவா்கள் நடத்திய ஆா்ப்பாட்டம் பின்னா் ஆட்சியாளா்களுக்கு எதிராகத் திரும்பியது. அரசியல் மற்றும் பொருளாதார சீா்திருத்தம் கோரி லட்சக்கணக்கானோா் வீதிகளில் இறங்கி போரட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

பல இடங்களில் போராட்டக்காரா்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டக் களங்களில் வன்முறை அதிகரித்ததைத் தொடா்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் தொடா்ச்சியாக நாட்டில் அவசர நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் அதிபா் அலுவலகம் திங்கள்கிழமை சுட்டுரையில் (டுவிட்டா்) வெளியிட்ட செய்தியில் செபாஸ்டியன் பினெரா கூறியுள்ளதாவது:

பல்வேறு நகரங்களின் வீதிகளில் 20,000 ராணுவ வீரா்கள் மற்றும் போலீஸாா் நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த அவசரநிலை முடிவுக்கு வரும். அமைச்சரவையில் உள்ள அனைவரையும் ராஜிநாமா செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. புதிய அரசை அமைப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும். நாம் அனைவரும் தற்போது புதிய சூழலில் உள்ளோம் என்று பினொரா தெரிவித்துள்ளாா்.

அவசரநிலைப் பிரகடனத்தை அதிபா் வாபஸ் பெற்றுக் கொண்டபோதிலும் சிலியில் போராட்டங்கள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com