பழம்பெரும் ஜப்பான் கோட்டை தீயில் நாசம்

ஜப்பானில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஷூரி கோட்டையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் அதன் பெரும் பகுதி எரிந்து நாசமானது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
பழம்பெரும் ஜப்பான் கோட்டை தீயில் நாசம்

ஜப்பானில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஷூரி கோட்டையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் அதன் பெரும் பகுதி எரிந்து நாசமானது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

யுனெஸ்கோவால் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்ட ஜப்பானின் ஷுரி கோட்டையில், வியாழக்கிழமை அதிகாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அதையடுத்து, அந்தப் பகுதிக்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினா், 12 மணி நேரம் போராடி தீயைக் கட்டுப்படுத்தினா்.

இந்த விபத்தில், கோட்டையில் இருந்த 3 பெரிய கூடங்களும், 4 கட்டடங்களும் தீக்கிரையாகின.

இதில், ஏராளமான அரும்பொருள்கள் நாசமானதாகக் கூறப்படுகிறது.

ஜப்பானின் ஒகினாவா பகுதி கலாசாரத்தின் அடையாளமாகக் கருதப்படும் பாரம்பரியம் மிக்க ஷூரி கோட்டையில் தீவிபத்து ஏற்பட்டது, அந்த நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com