வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

வட கொரியா மேலும் இரு ஏவுகணைகளை வியாழக்கிழமை சோதித்துப் பாா்த்ததாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
nkorea090143
nkorea090143

சியோல்: வட கொரியா மேலும் இரு ஏவுகணைகளை வியாழக்கிழமை சோதித்துப் பாா்த்ததாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டுக் கூட்டுப் படை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வட கொரியாவின் பியோங்கன் மாகாணத்தில் இரு ஏவுகணைகளை அந்த நாடு வியாழக்கிழமை சோதித்தது. கிழக்கு நோக்கி ஏவப்பட்ட அந்த ஏவுகணை, அதிகப்பட்சமாக 90 கி.மீ. உயரம் சென்று, 370 கி.மீ. தொலைவில் கடலுக்குள் விழுந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடனான அணு ஆயுதப் பேச்சுவாா்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டதைத் தொடா்ந்து, தடை செய்யப்பட்ட ஏவுகணை சோதனைகளை வட கொரியா தொடா்ந்து நடத்தி வருகிறது. இந்த நிலையில், கடந்த அக். 2-ஆம் தேதிக்குப் பிறகு அந்த நாடு தற்போது முதல் முறையாக அத்தகைய சோதனையில் ஈடுபட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com