சீக்கியர்களுக்கு எந்தவித சிக்கலுமின்றி விசா வழங்கப்படும்: இம்ரான் கான் உறுதி!

குருநானக் விழாவினையொட்டி, கர்தார்பூருக்கு வரும் சீக்கியர்களுக்கு எந்தவித சிக்கலும் இல்லாமல் விசா வழங்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். 
சீக்கியர்களுக்கு எந்தவித சிக்கலுமின்றி விசா வழங்கப்படும்: இம்ரான் கான் உறுதி!

குருநானக் விழாவினையொட்டி, கர்தார்பூர் குருத்வாராவிற்கு வரும் சீக்கியர்களுக்கு எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் விசா வழங்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். 

சீக்கிய மதத்தை நிறுவியவரும், அதன் முதல் குருவுமான குருநானக்கின் பிறந்த தினத்தையொட்டி, இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் சீக்கிய யாத்ரீகர்கள் பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் சாஹிப் குருத்வாராவுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். 

இந்த யாத்திரை மேற்கொள்ளும் சீக்கியர்களுக்கு வசதியாக, பஞ்சாபின் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவில் இருந்து பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள தர்பார் சாஹிப் குருத்வாரா வரை சாலை வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

இதில், குருதாஸ்பூரிலிருந்து எல்லைப் பகுதி வரையிலான வழித்தடத்தை இந்தியாவும், மறுபுறம் கர்தார்பூரிலிருந்து எல்லைப் பகுதி வரையிலான வழித்தடத்தை பாகிஸ்தானும் அமைக்க உள்ளன. கர்தார்பூர் வழித்தடம் எனப்படும் இச்சாலை வழியாகச் செல்லும் யாத்ரீகர்கள் விசா இல்லாமல் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ள முடியும்.

இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், 'இந்தியா மற்றும் பிற நாடுகளில் இருந்து வரும் சீக்கிய யாத்ரீகர்களுக்கு பாகிஸ்தான் அரசு வருகை உள்ளிட்ட விசாக்களை உடனடியாக வழங்கும். அவர்களுக்கான தேவைகள் அனைத்தும் செய்து கொடுக்கப்படும். விமான நிலையத்திலே நீங்கள் விசாக்களை உடனடியாகப் பெற முடியும்' என்று உறுதியளித்துள்ளார்.

மேலும், 'கர்த்தார்பூர் தான் மெதீனா; நன்கனா சாஹிப் தான் மெக்கா' என்றும் குறிப்பிட்டுள்ளார். 

வருகிற நவம்பர் 12 ஆம் தேதி நன்கனா சாஹிப்பில் குருநானக் தேவின் 550 வது பிறந்தநாள் விழா நடைபெற உள்ளதால் செப்டம்பர் 1ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 30ம் தேதி வரை விசா வழங்கல் குறித்த வேலைகளை அந்நாட்டு அரசு செய்யவுள்ளது. மேலும், குருநானக் தேவின் பிறந்தநாள் விழாவில் கர்தார்பூர் வழித்தடம் வழியாக தினமும் 5,000 பயணிகள் அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com