அமேசான் காட்டுத் தீ: பிரேசிலில் கடும் காற்று மாசு: ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம்

அமேசான் காடுகளில் கடந்த மாதம் ஏற்பட்ட காட்டுத் தீயினால் பிரேசிலின் பல நகரங்களில் கடும் காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக பிரான்ஸில் உள்ள ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


அமேசான் காடுகளில் கடந்த மாதம் ஏற்பட்ட காட்டுத் தீயினால் பிரேசிலின் பல நகரங்களில் கடும் காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக பிரான்ஸில் உள்ள ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உலகின் மிகப் பெரிய மழைக்காடான அமேசானின் பெரும்பகுதி பிரேசிலில் அமைந்துள்ளது. அமேசானில் கடந்த மாதம் பெரும் அளவில் காட்டுத் தீ பற்றி எரிந்தது. தீயை அணைப்பதற்கு வீரர்கள் கடுமையாகப் போராடி வந்தனர். 
இந்நிலையில், காடுகளை அழித்து தீயை அணைப்பதற்கு அதிபர் ஜெயிர் பொல்சொனாரோ கடந்த மாதம் தடை விதித்தார். 60 நாள்களுக்கு மேல் ஆகியும் தீ அணையாமல் எரிந்துக் கொண்டிருப்பதால், பிரேசிலின் பல நகரங்களில் காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது.
அதையடுத்து, அமேசானில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு குறித்து ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் செயற்கைக்கோள் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், காட்டுத் தீயினால் வளிமண்டலத்தில் அதிக அளவில் கார்பன்-டை-ஆக்ஸைடு பரவியுள்ளது. கார்பன் மோனாக்ஸைடு உள்ளிட்ட காற்று மாசுகள் அதிக அளவில் பரவியுள்ளன. இதனால், பருவநிலை மற்றும் சுகாதாரத்தில் தாக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு என்று கூறப்பட்டுள்ளது.
காற்று மாசுபாடு தொடர்பாக பிரேசில் மத்திய பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூறுகையில், காட்டுத் தீயினால் அதிக அளவில் காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது. காடுகளில் தீ ஏற்பட்டிருந்தாலும், மாசு துகள்கள் காற்றில் நகர்ந்து நகரங்களுக்குள் எளிதாக வந்தடைந்துவிடும். அதனால், சுவாசக் கோளாறு, நுரையீரல் கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். சுவாசக் கோளாறு பிரச்னைக்காக கடந்த மாதம் அதிக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றனர்.
பிரேசிலில் நடப்பு ஆண்டின் முதல் 8 மாதங்களில் மட்டும் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட காட்டுத் தீ சம்பவங்கள் நேரிட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை அமேசான் மழைக்காடுகளில் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com