பிரிக்ஸ் கூட்டமைப்பு | கோப்புப் படம்
பிரிக்ஸ் கூட்டமைப்பு | கோப்புப் படம்

பிரிக்ஸ் நாடுகள் சிந்தனைக் கிடங்கு அமைப்பின் சர்வதேச ஆய்வுக் கூட்டம்

பிரிக்ஸ் நாடுகள் சிந்தனை கிடங்கு அமைப்பின் சர்வதேச ஆய்வுக் கூட்டம் செப்டம்பர் 13-ஆம் நாள் பிரேசிலின் யுஎஸ்பி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

பிரிக்ஸ் நாடுகள் சிந்தனை கிடங்கு அமைப்பின் சர்வதேச ஆய்வுக் கூட்டம் செப்டம்பர் 13-ஆம் நாள் பிரேசிலின் யுஎஸ்பி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

சீனா, பிரேசில், ரஷியா, தென் ஆப்பிரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் 11 உயர் கல்வி நிறுவனங்கள், சிந்தனைக் கிடங்குகள் மற்றும் ஆய்வு நிறுவனங்களைச் சேர்ந்த அறிஞர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

எண்ணியல் பொருளாதார ஒத்துழைப்பு, அறிவியல் தொழில் நுட்ப ஒத்துழைப்பு ஆகியவை குறித்து அவர்கள் விவாதம் நடத்தினர்.

பிரிக்ஸ் நாடுகள் சிந்தனைக் கிடங்கு ஒத்துழைப்புக்கான சீனச் செயற்குழுவின் துணைச் செயலாளர் டொங் வெய்ஹுவா இக்கூட்டத்தில் கூறுகையில், 2018-ஆம் ஆண்டில் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள், புதிய தொழில் புரட்சியின் கூட்டுறவை உருவாக்க முடிவு செய்தனர்.

இது, பிரிக்ஸ் நாடுகள் 4ஆவது தொழில் புரட்சிக்குத் தலைமைத் தாங்குவதற்கான திசையை உறுதிப்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.

தகவல்: சீன வானொலி தமிழ் பிரிவு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com