காகங்கள், பூனைகள் மூலம் சிஐஏ உளவு!

சோவியத் யூனியனுடனான பனிப் போர் காலத்தின்போது, உளவுப் பணிகளில் காகங்கள், புறாக்கள், நாய்கள், பூனைகள் போன்ற உயிரினங்களை ஈடுபடுத்துவது குறித்து அமெரிக்க உளவு அமைப்பு ஆய்வுகள் மேற்கொண்டது
காகங்கள், பூனைகள் மூலம் சிஐஏ உளவு!

சோவியத் யூனியனுடனான பனிப் போர் காலத்தின்போது, உளவுப் பணிகளில் காகங்கள், புறாக்கள், நாய்கள், பூனைகள் போன்ற உயிரினங்களை ஈடுபடுத்துவது குறித்து அமெரிக்க உளவு அமைப்பு ஆய்வுகள் மேற்கொண்டது தற்போது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து, அண்மையில் வெளியிடப்பட்ட அந்த ஆய்வுகள் குறித்த ஆவணங்கள் தெரிவிப்பதாவது: 

சோவியத் யூனியனுக்கும், அமெரிக்காவுக்கும் பனிப்போர் உச்சகட்டத்தில் இருந்தபோது, சோவியத் யூனியனின் ராணுவ ரகசியங்களை உளவு பார்ப்பதற்காக விலங்குகளையும், பறவைகளையும் பயன்படுத்த அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ முடிவு செய்தது. அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக பல்வேறு ஆய்வுகளையும் சிஐஏ மேற்கொண்டது.
அதன் ஒரு பகுதியாக, நாயின் உடலில் மின்னணு கருவியைப் பொருத்தி, தொலை தூரத்திலிருந்து அந்த நாயை இயக்க முடியுமா என்று சிஐஏ ஆய்வு செய்தது.

மேலும், 60-களில் அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த சோவியத் யூனியனின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களின் கட்டுமானப் பணிகளை வேவுபார்க்க, டால்பின்களுக்கு சிஐஏ பயிற்சி அளித்தது. 
எனினும், அதனை வெற்றிகரமாக செயல்படுத்த முடியவில்லை.
அதுமட்டுமன்றி, சோவியத் யூனியன் ராணுவ நிலைகளைப் படமெடுக்கவும், ஒட்டுக்கேட்புக் கருவிகளை ஜன்னல் இடுக்குகள் வழியாக போடவும் பறவைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில், ஒரு காகம் மிகச் சிறப்பாக செயல்பட்டதால், சிஐஏ-வின் நோக்கத்தை அது நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், ஒருமுறை பயிற்சிக்காக பறந்து சென்ற அந்தக் காகத்தை பெரிய பறவைகள் தாக்கியதால் அது திரும்பி வரவேயில்லை.

அத்துடன், தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் புறாக்களை, சோவியத் யூனியனை வேவுபார்ப்பதற்காக சிஐஏ பயிற்சி அளித்து வந்தது. அதற்காக, அமெரிக்காவிலேயே பல இடங்களுக்குச் சென்று படமெடுத்து வர ஏராளமான புறாக்கள் அனுப்பப்பட்டன. எனினும், அவற்றில் ஒரு சில புறாக்கள் மட்டுமே சரியான முறையில் படமெடுத்திருந்தன; மற்றவை எடுத்த படங்களில் எதுவுமே தெரியவில்லை.

ஏராளமான புறாக்கள் விலையுயர்ந்த கேமராவுடன் மாயமாகிப் போகின. ஒரே ஒரு புறா மட்டும் திரும்பி வந்தது; ஆனால், அதனிடம் பொருத்தப்பட்டிருந்த கேமராவைக் காணவில்லை.

அந்த வகையில், புறா மூலம் வேவுபார்க்கும் திட்டமும் கைவிடப்பட்டது என்று அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com