நிலையான வளர்ச்சி பெறும் சீனப் பொருளாதாரம்

சீனத் தேசியப் புள்ளி விவரப் பணியகம் 16-ஆம் நாள், ஆகஸ்ட் அன்று தேசியப் பொருளாதாரச் செயல்பாட்டின் முக்கிய குறியீடுகளை வெளியிட்டது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

சீனத் தேசியப் புள்ளி விவரப் பணியகம் 16-ஆம் நாள், ஆகஸ்ட் அன்று தேசியப் பொருளாதாரச் செயல்பாட்டின் முக்கிய குறியீடுகளை வெளியிட்டது. இவற்றில் தொழில், நுகர்வு மற்றும் முதலீட்டுத் துறைகளின் குறியீடுகள் அடங்குகின்றன. 

இவ்வாண்டின் ஜனவரி முதல் ஆக்ஸ்ட் வரை, ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் கூட்டு லாபம் 5.6 விழுக்காடு அதிகரித்தது.

உயரிய தொழில் நுட்பத் தயாரிப்புத் தொழிலின் கூட்டு லாபத்தின் அதிகரிப்பு, 8.4 விழுக்காட்டை எட்டியது. இக்காலத்தில் சீனச் சமூக நுகர்வுப் பொருட்களின் மொத்த சில்லறை விற்பனைத் தொகை, 8.2 விழுக்காடு அதிகரித்தது. 

சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி தொகை, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 3.6 விழுக்காடு அதிகம். குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றியம், ஆசியான் உள்ளிட்ட பிரதேசங்களுடனான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத் தொகை, வேகமாக அதிகரித்து வருகிறது.

அதே வேளை, இவ்வாண்டின் முதல் எட்டு திங்களில் உள்ளபடியே அன்னிய முதலீட்டுப் பயன்பாட்டுத் தொகை, 6.9 விழுக்காடு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com