சீனாவில் அமோக அறுவடை பெறும் தானிய விளைச்சல்

சீனாவில் இலையுதிர்கால தானிய விளைச்சலின் அறுவடை தற்போது தொடங்கியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


சீனாவில் இலையுதிர்கால தானிய விளைச்சலின் அறுவடை தற்போது தொடங்கியுள்ளது. நல்ல உற்பத்தி நிலைமைக்கு ஏற்ப, இவ்வாண்டின் தானிய விளைச்சல் அமோக அறுவடையைப் பெறும் வாய்ப்புகள் அதிகம் என்று சீன வேளாண் மற்றும் ஊரக விவகார அமைச்சகம் 21ஆம் நாள் தெரிவித்துள்ளது.

மேம்பட்ட கட்டமைப்பு, பசுமையான உற்பத்தி, உயரமான தரம் ஆகியவை இவ்வாண்டின் தானிய உற்பத்தியின் மிகப் பெரிய மூன்று தனிச்சிறப்புகளாகும் என்று இவ்வமைச்சகத்தைச் சேர்ந்த பயிரிடுதல் பிரிவின் பொறுப்பாளர் தெரிவித்தார்.

இவ்வாண்டு சீனாவின் பெரும்பாலான பகுதிகளில் சீராக வளர்ந்த தானியங்களின் உற்பத்தியில் விளைச்சலுக்கான போக்கு அதிகரித்து காணப்பட்டுள்ளது. வரும் காலத்தில் கடும் இயற்கை சீற்றம் ஏற்படாமல் இருந்தால், சீனா மீண்டும் அமோக அறுவடையை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தகவல்: சீன வானொலி தமிழ்ப் பிரிவு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com