ஹூஸ்டனில் சீக்கிய, போரா சமூகத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு

ஹூஸ்டனில் போரா சமூகத்தினருடனும் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து கலந்துரையாடினார். 
ஹூஸ்டனில் சீக்கிய, போரா சமூகத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடி, ஹூஸ்டனில் உள்ள சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர்கள் இந்திய அரசு எடுத்த சில முடிவுகளுக்கு பிரதமர் மோடியை வாழ்த்தினர். மேலும் பிரதமர் மோடிக்கு நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தனர்.

நன்றி: ஏஎன்ஐ ட்விட்டர்

இந்நிலையில், 1984 சீக்கிய இனப்படுகொலை தொடர்பாக உரிய நடவடிக்கை. தில்லி விமான நிலையத்தை குரு நானக் தேவ் சர்வதேச விமான நிலையமாக பெயர் மாற்ற வேண்டும். இந்திய அரசியலமைப்பின் 25-ஆவது பிரிவு மற்றும் ஆனந்த் திருமண சட்டம், விசா மற்றும் பாஸ்போர்ட் புதுப்பித்தல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதுதொடர்பாக கலிஃபோர்னியாவின் அர்வின் ஆணையர் அவிந்தர் சாவ்லா கூறுகையில், சீக்கிய சமூகத்திற்காக பிரதமர் மோடி செய்த நற்காரியங்களுக்காக நன்றி தெரிவித்தோம். கர்த்தார்பூர் வழித்தடம் ஏற்படுத்தியுள்ளது சிறப்புக்குரிய நடவடிக்கையாகும். அமெரிக்க அதிபர் டிரம்ப் தானாக முன்வந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்வதே, பிரதமர் மோடி எவ்வளவு பெரிய தலைவர் என்பதைக் காட்டுகிறது என்று தெரிவித்தார்.

நன்றி: ஏஎன்ஐ ட்விட்டர்

இதையடுத்து, ஹூஸ்டனில் போரா சமூகத்தினருடனும் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து கலந்துரையாடினார். அவர்களும் பிரதமர் மோடிக்கும் பாராட்டு தெரிவித்து நினைவுப் பரிசு வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com