இஸ்ரேல்: புதிய அரசை அமைப்பதற்கான பேச்சுவார்த்தை தொடக்கம்

இஸ்ரேலில் அடுத்த அரசை அமைப்பதற்கான பேச்சுவார்த்தையை அந்த நாட்டு அரசியல் கட்சித் தலைவர்களுடன் அதிபர் ரூவன் ரிவ்லின் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார்.
இஸ்ரேல்: புதிய அரசை அமைப்பதற்கான பேச்சுவார்த்தை தொடக்கம்

இஸ்ரேலில் அடுத்த அரசை அமைப்பதற்கான பேச்சுவார்த்தையை அந்த நாட்டு அரசியல் கட்சித் தலைவர்களுடன் அதிபர் ரூவன் ரிவ்லின் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அடுத்த அரசை அமைப்பது குறித்து முக்கிய கட்சிகளின் தலைவர்களுடன் அதிபர் ரூவன் ரிவ்லின் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளார்.
பொதுவாக, தேர்தலில் வெற்றி பெற்ற கட்சியின் தலைவரை அதிபர்கள் அழைத்துப் பேசுவது இஸ்ரேலில் சம்பிரதாய நிகழ்வாகும்.
ஆனால், இந்தத் தேர்தலில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்து தேசிய அரசு அமைக்க முயற்சி செய்து வரும் சூழலில், புதிய அரசை அமைப்பதில் அதிபர் ரூவன் ரிவ்லின் முக்கியப் பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
120 இடங்களைக் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலில் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
அதையடுத்து, எதிர்க்கட்சியான புளூ அண்டு ஒயிட் கட்சியுடன் இணைந்து தேசிய அரசை அமைக்க பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நிலையில், புதிய அரசு அமைப்பது குறித்த பேச்சுவார்த்தையை அதிபர் ரூவன் ரிவ்லின் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com