செவ்வாய் கிரகத்திற்கு தங்கள் பெயரை அனுப்ப பதிவு செய்ய நெருங்கும் இறுதி நாள்: அமீரக மக்களுக்கு ஒரு 'அலெர்ட்'! 

செவ்வாய் கிரகத்திற்கு தங்கள் பெயரை அனுப்ப விரும்பும் ஐக்கிய அரபு அமீரக நாட்டு மக்களுக்கு, பெயர்களைப் பதிவு செய்துகொள்ள செவ்வாய்க்கிழமைதான் இறுதி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகம்
செவ்வாய் கிரகம்

துபை: செவ்வாய் கிரகத்திற்கு தங்கள் பெயரை அனுப்ப விரும்பும் ஐக்கிய அரபு அமீரக நாட்டு மக்களுக்கு, பெயர்களைப் பதிவு செய்துகொள்ள செவ்வாய்க்கிழமைதான் இறுதி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்திற்கு நாசா அனுப்ப உள்ள விண்கலத்தில் இடம்பெறவுள்ள மைக்ரோசிப்பில் பெயர் பொறித்து, அதன் மூலமாக உங்கள் பெயரை செவ்வாய் கிரகத்திற்கு பயணம் செய்ய வைக்கும் அனுபவத்தைப் பெற, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா உலகெங்கிலும் உள்ள மக்களை தங்கள் பெயர்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க  அழைப்பு விடுத்திருந்தது.

நாசா 2020-ஆம் ஆண்டு அனுப்பவுள்ள செவ்வாய் கிரக ரோவரில் இந்த மைக்ரோசிப் வைக்கப்படும். அதில் இடம்பெறுவதற்காக தங்களது பெயர்களை கீழகண்ட  வலைப்பக்கத்தில் செப்டம்பர் 30-க்கு முன் சமர்ப்பிக் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

https://mars.nasa.gov/participate/send-your-name/mars2020

இதுவரை 98 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் பெயர்களை சமர்ப்பித்துள்ளனர். ரோவர் 2020 ஜூலை மாதத்தில் விண்ணில் ஏவப்பட்டு, பிப்ரவரி 2021க்குள் செவ்வாய் கிரகத்தைத் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் செவ்வாய் கிரகத்திற்கு தங்கள் பெயரை அனுப்ப விரும்பும் ஐக்கிய அரபு அமீரக நாட்டு மக்களுக்கு பெயர்களை பதிவு செய்ய செவாய்க்கிழமைதான் இறுதி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி அக்டோபர் 1-ஆம் தேதி காலை 07.59 மணிக்கு பதிவு செய்வதற்கான அவகாசம் முடிவுக்கு வருகிறது என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com