உலக உயிரின நாகரிகத்திற்கு சீனாவின் பங்கு

உலக உயிரின நாகரிகத்திற்கு சீனாவின் பங்கு

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70-ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்ட நடவடிக்கைக்கான செய்தி மையத்தில் செப்டம்பர் திங்கள் 29-ஆம் நாள், 4-ஆவது செய்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70-ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்ட நடவடிக்கைக்கான செய்தி மையத்தில் செப்டம்பர் திங்கள் 29-ஆம் நாள், 4-ஆவது செய்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70 ஆண்டுகளில், சீன உயிரினச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு லட்சியம், தொடக்க வளர்ச்சிக் காலக்கட்டத்தில் இருந்து மறுமலர்ச்சியடைந்து வருகிறது. இதன் விளைவாக, சீனா பல்வேறு வரலாற்றுச் சாதனைகளைப் பெற்றுள்ளது. 

இதனிடையே குறிப்பிடத்தக்க வரலாற்று சீர்திருத்தமும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18-வது தேசிய மாநாட்டிற்கு பிறகு இதுவரை, உலகச்சுற்றுச் சூழல் மேலாண்மையில் சீனா ஆக்கப்பூர்வமாகப் பங்கெடுத்து வருகிறது. தொடரவல்ல வளர்ச்சிக்கான 2030-ஆம் ஆண்டு நிரலை நடைமுறைப்படுத்தும் திட்டத்தை சீனா முதலில் வெளியிட்டது. உலக காலநிலை மாற்றம் பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்திற்கு சீனா வழிகாட்டி வருகிறது. உலக உயிரின நாகரிகக் கட்டுமானத்தில் முக்கியமாக பங்கெடுத்து, அதற்கு பங்காற்றி, வழிகாட்டி வரும் நாடாக சீனா விளங்குகிறது என்று சீன சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் லீகான்ஜியே தெரிவித்தார்.

காற்று மாசுப்பாட்டுப் பிரச்னை, பொது மக்கள் வாழ்க்கையுடன் நெருக்கமாகத் தொடர்புடைய பிரச்சினையாகும். இப்பிரச்சினை எப்போதும் பரந்தளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில், சீனாவிலுள்ள காற்றுத் தரம் பெரிதும் மேம்படுத்தப்பட்டுள்ளது. சீன சூழலியல் மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சர் லீகான்ஜியே செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில்,

பொதுவாகக் கவனம் செலுத்தப்பட்டுள்ள பிஎம் 2.5 என்னும் குறியீட்டை எடுத்துக்காட்டாக பார்த்தால், பிஎம் 2.5 கண்காணிப்பில் சேர்க்கப்பட்டுள்ள முதலாவது தொகுதியிலான சேர்க்கப்பட்டுள்ள 74 முக்கிய  நகரங்கள் 6 ஆண்டுகளின் முயற்சியுடன் அவற்றின் பிஎம் 2.5 குறியீடு, 2013-ஆம் ஆண்டில் இருந்ததை விட, 2018-ஆம் ஆண்டில், 41.7 விழுக்காடு குறைந்துள்ளது. குறிப்பாக, பெய்ஜிங் மாநகரில் இக்குறியீடு 43 விழுக்காடு குறைந்துள்ளது. கடந்த 2,3 ஆண்டுகளில், இக்குறியீடு10 விழுக்காட்டுக்கு மேல் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எங்களுடைய மேலாண்மைப் பணி மிகவும் பயனுள்ளதாக இருப்பதை இது காட்டியுள்ளது என்று அவர் தெரிவித்தார். 

கடந்த 70 ஆண்டுகளில், சீனாவில் 2750 இயற்கைப் பாதுகாப்பு மண்டலங்கள் கட்டியமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த பரப்பளப்பு 14 லட்சத்து 70 ஆயிரம் சதுர கிலோமீட்டராகும். இது, சீனாவின் நிலப்பரப்பில் 15 விழுக்காட்டை வகிக்கிறது என்று சீன சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் துணை அமைச்சர் ஹூவாங்ருன்ச்சியூ தெரிவித்தார்.

தகவல்: சீன வானொலி தமிழ் பிரிவு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com