கரோனா: நேபாளத்தில் அதிக அளவில் பாதிப்பும், உயிரிழப்பும் பதிவு

நேபாளத்தில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் அதிக அளவிலாக கரோனா பாதிப்பும், உயிரிழப்பும் பதிவாகியுள்ளது. புதிதாக இதுவரை இல்லாதவகையில் 14 பேர் உயிரிழந்தனர். 1,221 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேபாளத்தில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் அதிக அளவிலாக கரோனா பாதிப்பும், உயிரிழப்பும் பதிவாகியுள்ளது.

சீனாவிவில் தொடங்கி பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. அந்தவகையில் சீனாவில் அண்டை நாடான நேபாளத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக நேபாள சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''கடந்த மே மாதத்தில் முதல் கரோனா உயிரிழப்பு பதிவானது. அதிலிருந்து இதுவரை இல்லாத வகையில் இன்று (திங்கள் கிழமை) 14 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். 

அதேபோன்று 1,221 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38,561-ஆக அதிகரித்துள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் புதிதாக 12 பேர் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 40-ஆக அதிகரித்துள்ளது. பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

நேபாளத்தில் பொருளாதார சரிவை கணக்கில் கொண்டு ஜூலை 22-ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கில் ஒருசில தளர்வுகள் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com