கரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: 24 கோடி டாலர்கள் கூடுதல் செலவு

கரோனா தொற்றால் ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு சுமார் 24 கோடி டாலர்கள் வரை கூடுதலாக செலவு ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஒலிம்பிக் போட்டிகள் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
கரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு 24 கோடி டாலர்கள் கூடுதல் செலவு
கரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு 24 கோடி டாலர்கள் கூடுதல் செலவு

கரோனா தொற்றால் ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு சுமார் 24 கோடி டாலர்கள் வரை கூடுதலாக செலவு ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஒலிம்பிக் போட்டிகள் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

உலகம்  முழுவதும் பரவி வரும் கரோனா வைரஸ் பரவலால் நடைபெற இருந்த முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டு கோடையில் ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறுவதாக இருந்த ஒலிம்பிக் போட்டிகள் கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒரு வருடம்  ஒத்திவைக்கப்படுவதாக  சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் ஜப்பானிய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் அவையில் பேசிய ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா 2021இல் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதில் ஜப்பான் உறுதியாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்நிலையில் கரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை நடத்த திட்டமிடப்பட்ட தொகையை விட கூடுதலாக 24 கோடி டாலர்கள் வரை செலவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒலிம்பிக் போட்டி தாமதமானதால் ஏற்பட்ட கூடுதல் செலவுகளுக்கு 15 கோடி டாலர்களும் கரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 9 கோடி டாலர்களும் செலவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக ஒலிம்பிக் போட்டிகள் குழு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com