அமெரிக்கா: உலகின் மிகப்பெரிய வானொலி தொலைநோக்கி சேதம்

அமெரிக்காவில் உலகின் மிகப்பெரிய வானொலி தொலைநோக்கி பகுதியளவு சேதமடைந்திருந்த நிலையில் நேற்று முழுவதுமாக அறுந்து விழுந்து சேதமடைந்தது.

அமெரிக்காவின் புவேர்ட்டோ ரிக்கோ பகுதியில் வானியல் கண்டுபிடிப்புகளுக்காகவும், ஏவுகணை தாக்குதல்களை முன்கூட்டியே கண்டறியும் வகையிலும் ராணுவ நிதியுதவியுடன் மிகப்பெரிய வானொலி தொலைநோக்கி அமைக்கப்பட்டது.

அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளை சார்பில் கடந்த 57 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்த வானொலி தொலைநோக்கி கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்தே சேதங்களை சந்தித்து வந்தது.

இந்நிலையில் 450 அடி கேபிள்களால் ஆயிரம் அடி அகலம் கொண்ட எதிரொலிப்பானுக்கு மேலே நிறுவப்பட்டிருந்த 900 டன் எடைக் கொண்ட தொலைநோக்கிக் கருவி, திடீரென அறுந்து விழுந்தது. இதில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று அமெரிக்க தேசிய அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

விண்வெளியிலிருந்து வரும் ரேடியோ அலைகளை இந்த தொலைநோக்கி மூலம் பெற்று விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டுவந்த நிலையில், தற்போது சேதமடைந்துள்ளது. 
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com