உலகளவில் கரோனா பாதிப்பு 6.55 கோடியாக உயர்வு 

உலகளவில் கரோனா தொற்றுக்கு பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 6.55 கோடியாக உயர்ந்துள்ளது. 
Worldwide COVID-19 cases surpass 65 million-mark
Worldwide COVID-19 cases surpass 65 million-mark

உலகளவில் கரோனா தொற்றுக்கு பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 6.55 கோடியாக உயர்ந்துள்ளது. 

டிசம்பர் 4-ம் தேதி நிலவரப்படி, உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 6 கோடியே 55 லட்சத்து 51 ஆயிரத்து 779 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்புக்கு இதுவரை 1,51,2,162 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4,53,90,667 போ் குணமடைந்துள்ளனா். சுமாா் 1,86,48,950 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,06,495 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகில் கரோனா தொற்றுக்கு மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை 1,45,35,196 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,82,829 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்த்துள்ளனர். 8,56,1,427 பேர் குணமடைந்துள்ளனர், 5,69,0940 பேர் தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com