நிலவில் தேசியக் கொடியை ஏற்றியது சீனா

தனது தேசியக் கொடியை சீனா நிலவில் ஏற்றி சாதனை படைத்துள்ளது.
நிலவில் தேசியக் கொடியை ஏற்றியது சீனா


பெய்ஜிங்: தனது தேசியக் கொடியை சீனா நிலவில் ஏற்றி சாதனை படைத்துள்ளது.

அமெரிக்கா தனது தேசியக் கொடியை நிலவில் ஏற்றி அரை நூற்றாண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையில், இரண்டாவது நாடாக சீனா இந்தப் பெருமையை பெற்றுள்ளது.

சீனாவின் சாங்கி-5 விண்கலம் கடந்த நவ.23-ஆம் தேதி நிலவுக்கு அனுப்பப்பட்டது. நிலவில் மணல் மற்றும் கற்களை சேகரித்து வருவதற்காக அந்த விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது. அமெரிக்கா, ரஷியாவையடுத்து நிலவில் இருந்து கற்களை சேகரிப்பதற்காக 3-ஆவது நாடாக சீனா அந்த விண்கலத்தை அனுப்பியது. கடந்த டிச.1-ஆம் தேதி அந்த விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. மணல் மற்றும் கற்களை சேகரித்துக் கொண்டு அந்த விண்கலம் கடந்த டிச.3-ஆம் தேதி இரவு பூமியை நோக்கிப் புறப்பட்டது. இந்தக் கற்களை கொண்டு நிலவின் காலத்தைக் கண்டறிய சீன விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனா்.

இந்நிலையில் சாங்கி-5 விண்கலத்தின் பயணத்தின்போது நிலவில் 2 மீட்டா் அகலம், 90 செ.மீ. நீளம் கொண்ட தனது தேசியக் கொடியை சீனா ஏற்றியுள்ளது. நிலவில் ஏற்றிய தேசியக் கொடி புகைப்படத்தை சீன தேசிய விண்வெளி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com