பிரபல கொரியத் திரைப்பட இயக்குநர் கிம் கி டுக் கரோனாவால் பலி

உலகப் புகழ் பெற்ற கொரியத் திரைப்பட இயக்குநர் கிம் கி டுக் கரோனா தொற்று காரணமாக வெள்ளிக்கிழமை பலியானார். 
கொரியத் திரைப்பட இயக்குநர் கிம் கி டுக்
கொரியத் திரைப்பட இயக்குநர் கிம் கி டுக்

உலகப் புகழ் பெற்ற கொரியத் திரைப்பட இயக்குநர் கிம் கி டுக் கரோனா தொற்று காரணமாக வெள்ளிக்கிழமை பலியானார். 

பியட், பேட் கை, தி வில், தி நெட், டைம், ப்ரீத் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் கிம் கி டுக். கரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் சிகிச்சை பலனளிக்காமல் கிம் கி டுக் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

59 வயதான கிம் கி டுக் வெனிஸ் திரைப்பட விருது, பெர்லின் திரைப்பட விருது மற்றும் கேன்ஸ் திரைப்பட விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com