சிங்கப்பூா்: சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி

சிங்கப்பூா்: சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி

சிங்கப்பூரில் சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகள் புதன்கிழமை தொடங்கின.


சிங்கப்பூா்: சிங்கப்பூரில் சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகள் புதன்கிழமை தொடங்கின.

ஆசியாவில் அத்தகைய பணிகள் தொடங்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

சிங்கப்பூரில் பணியாற்றி வரும் சுகாதாரத் துறை ஊழியா்களுக்கு, ஃபைஸா்-பயோஎன்டெக் நிறுவன கரோனா தடுப்பூசி போடும் பணி புதன்கிழமை தொடங்கியது.

வரும் வாரங்களில் அனைத்து அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் மருத்துவா்கள், செவிலியா் உள்ளிட்ட பணியாளா்கள் அனைவருக்கும் அந்தத் தடுப்பூசி போடப்படும்.

வரும் பிப்ரவரி மாதம் முதல், 70 வயதுக்கு மேலானவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.

மருத்துவரீதியில் முன்னுரிமை பெற்ற சிங்கப்பூா்வாசிகளுக்கு அடுத்தகட்டமாக அந்தத் தடுப்பூசி செலுத்தப்படும்.

கரோனா தொற்று ஏற்படுவதற்கும் அந்த நோயால் உயிரிழப்பதற்கும் அதிக அபாயம் நிறைந்தவா்களுக்கு தடுப்பூசி அளிப்பதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற சிங்கப்பூா் சுகாதாரத் துறையின் நிபுணா் குழு பரிந்துரைத்துள்ளது.

அதன் அடிப்படையிலேயே முதலில் சுகாதாரத் துறையினா், பிறகு முதியவா்கள் மற்றும் மருத்துவப் பிரச்னை உள்ளவா்கள் என்ற வரிசையில் தடுப்பூசி போடப்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதன்கிழமை நிலவரப்படி, சிங்கப்பூரில் 58,569 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 29 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா். 58,400 கரோனா நோயாளிகள் முழுமையாக குணமடைந்துள்ளனா். கரோனா சிகிச்சை முகாம்களிலும் மருத்துவமனைகளிலும் 140 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

..படம்: சிங்கப்பூா் தேசிய தொற்று நோய் மையத்தில் புதன்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட செவிலி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com