தோல்வி அடைந்த செயற்கைக்கோள் திட்டம்: ஈரான்

ஈரான் தன் செயற்கைக்கோளான ஜாபரை பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்தத் தவறிவிட்டது என்று மாநில ஐஆர்என் டிவி தெரிவித்துள்ளது.
தோல்வி அடைந்த செயற்கைக்கோள் திட்டம்: ஈரான்

தங்களின் செயற்கைக்கோளான ஜாபரை, பூமியின் சுற்று வட்டப்பாதைக்குள் செலுத்தத் தவறிவிட்டது ஈரான் என்று மாநில ஐஆர்என் டிவி தெரிவித்துள்ளது.

இந்தச் செயற்கைக்கோளை பூமியின் சுற்று வட்டப்பாதையில் செலுத்தப்பட வேண்டிய விண்கலம் அதன் வேகத்தை எட்ட முடியவில்லை என்று ஈரானின் விண்வெளி திட்டங்களுக்கான பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அஹ்மத் ஹொசைனி தெரிவித்தார்.

செயற்கைக்கோள் ஜாபரை 540 கி.மீ உயரத்துக்கு அனுப்பியது, ஆனால் தகுந்த வேகம் இல்லாததால் இந்த செயல்முறை முழுமைப் பெறவில்லை என்று ஹொசைனி கூறினார்.

ஈரானிய விண்வெளி வல்லுநர்கள் தரவுகளை ஆராய்ந்து செயல்படுவார்கள், சிக்கல்களை சரி செய்து செயற்கைக்கோளை மீண்டும் ஏவுவதற்கு தயார் செய்வார்கள் என்று அவர் கூறினார்.

90 கி.மீ தூரமுள்ள ஜாபர் வண்ண கேமராக்கள் பொருத்தப்பட்ட தொலைநிலை உணர்திறன் கொண்ட செயற்கைக்கோள் ஆகும். விண்வெளியிலிருந்து எண்ணெய் இருப்பு, சுரங்கங்கள், காடுகள் மற்றும் இயற்கை பேரழிவுகளை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்வதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 2019-இல், ஈரானிய ராக்கெட் அதன் ஏவுதளத்தில், வடக்கு ஈரானிலுள்ள இமாம் கோமெய்னி விண்வெளி மையத்தில் வெடித்தது.

கவோஷ்கர் -3 (எக்ஸ்ப்ளோரர் -3) பிப்ரவரி 2010 இல் பயோ காப்ஸ்யூல் கேரியரைப் பயன்படுத்தி ஈரான் தனது முதல் ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்பியது.

2009-இல் ஓமிட் (ஹோப்) எனும் செயற்கைக்கோள் ஈரானிலேயே  உருவாக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com