மியன்மார் தேசிய விவகார ஆலோசகர் ஆங் சன் சூ கியுடன் ஷி ஜின்பிங் சந்திப்பு

மியன்மாரின் தேசிய விவகார ஆலோசகர் ஆங் சான் சுகி அம்மையார் அந்நாட்டு அரசு..
மியன்மார் தேசிய விவகார ஆலோசகர் ஆங் சன் சூ கியுடன் ஷி ஜின்பிங் சந்திப்பு

மியன்மாரின் தேசிய விவகார ஆலோசகர் ஆங் சான் சுகி அம்மையார் அந்நாட்டு அரசு தலைவரின் இல்லத்தில், சீன அரசு தலைவர் ஷி ஜின்பிங்கை ஜனவரி 17ஆம் தேதி சந்தித்தார்.

ஷி ஜின்பிங்கின் மின்மார் அரசு முறைப் பயணத்தை அவர் மனதார வரவேற்றார். சீனாவின் வசந்த விழா விரைவில் வரும் இச்சமயம், இரு நாட்டுத் தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவாகவும் உள்ளது. இது முக்கியத்துவம் வாய்ந்தது. கடந்த பல ஆண்டுகளாக சீனா வழங்கி வரும் ஆதரவுக்கு மியன்மார் உளமார்ந்த நன்றி தெரிவிக்கிறது. ஷி ஜின்பிங்கின் இப்பயணம் இரு நாட்டுறவை முன்னேற்றுவது உறுதி என்று நம்புவதாக ஆங் சான் சுகி அம்மையார் தெரிவித்தார்.

ஷி ஜின்பிங் கூறுகையில்,

சீன அரசுத் தலைவர் பதவி ஏற்ற பின், மியன்மாரில் நான் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும். இவ்வாண்டில் எனது முதல் பயணமாகவும் இது உள்ளது. இரு நாட்டு தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்ட நிகழ்ச்சிகளை இரு தரப்பும் கூட்டாக நடத்தும்.

மியன்மார் சொந்த பாதையில் நடைபோடுவதை சீனா உறுதியாக ஆதரிக்கிறது. இரு நாடுகள் மற்றும் மக்களுக்கிடையிலான நட்பை ஆழமாக்கி, சீன-மியன்மார் பொதுச் சமூகத்தைக் கூட்டாக உருவாக்க சீனா விரும்புகின்றது என்று தெரிவித்தார்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com