ஹாங்காங் விவகாரத்தில் தலையிட்ட அமெரிக்க அரசியல்வாதிகளுக்குத் தோல்வி

ஹாங்காங் தன்னாட்சி மசோதாவை அமரிக்க நாடாளுமன்றம் அண்மையில் ஏற்றுக் கொண்டு, ஹாங்காங்கின் தன்னாட்சியைச் சீர்குலைக்கும் தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்குத் தடை விதிப்பதாக அச்சுறுத்தியது.
ஹாங்காங் விவகாரத்தில் தலையிட்ட அமெரிக்க அரசியல்வாதிகளுக்குத் தோல்வி

ஹாங்காங் தன்னாட்சி மசோதாவை அமரிக்க நாடாளுமன்றம் அண்மையில் ஏற்றுக் கொண்டு, ஹாங்காங்கின் தன்னாட்சியைச் சீர்குலைக்கும் தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்குத் தடை விதிப்பதாக அச்சுறுத்தியது.

சீனாவின் உள்விவகாரத்தில் வெளிப்படையாக தலையீடு செய்வதோடு, சர்வதேச சட்டம் மற்றும் பன்னாட்டு உறவுக் கோட்பாட்டையும் அமெரிக்கா கடுமையாகச் சீர்குலைத்துள்ளது. ஹாங்காங்கைச் சீர்குலைப்பதன் மூலம் சீனாவைத் தடுக்கும் அதன் நோக்கம் தெள்ளத் தெளிவாக உள்ளது. ஆனால் அமெரிக்க அரசியல்வாதிகள் எவ்வாறு முயன்றாலும், ஹாங்காங்கில் குழப்பம் ஏற்படுத்துபவர்கள் தனித்தனியாக சிதறிவிட்டனர். இதனால், அவர்களின் திட்டம் தோல்வியில் முடிந்து விடும் என்பது உறுதி.

ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் 44ஆவது கூட்டத்தொடரில் ஹாங்காங்கில் தேசியப் பாதுகாப்பைப் பேணிக்காப்பதற்கான சட்டமியற்றலுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. நீதி நியாயம் பற்றி பன்னாட்டுச் சமூகம் சரியாக மதிப்பிடும் என்பதை இது வெளிப்படுத்தியுள்ளது.

ஹாங்காங்கிற்கான தேசியப் பாதுகாப்பு சட்டமியற்றல் மீது அமெரிக்க அரசியல்வாதிகள் பழித்தூற்றி, இரட்டை வரையறை மற்றும் கொள்ளைக்காரர் தருக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களது இச்செயலுக்கு முழு உலகமும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், ஹாங்காங்கின் குறிப்பிட்ட விதிமுறை திருத்தம் செய்ததால் ஏற்பட்ட நெருக்கடிக்கு மிக முக்கிய சதி செய்பவர்களான அவர்கள், ஹாங்காங்கின் எதிர்ப்பிரிவினருடன் இணைந்து தீட்டிய வன்முறை சம்பவத்தில் பயங்கரவாதத் தன்மை உண்டு. ஹாங்காங் மக்களின் அடிப்படை மனித உரிமையை கடுமையாக மீறியதோடு, ஹாங்காங்கின் நீண்டகால அமைதி மற்றும் செழுமையையும் ஒரு நாட்டில் இரண்டு அமைப்பு முறைகள் என்ற கொள்கையையும் பாதித்துள்ளது.

சீனத் தேசிய பாதுகாப்பு உறுதியாக இருந்தால், ஹாங்காங்கின் மேம்பாடு காணப்படும் என்று இன்னல்களைக் கடந்த ஹாங்காங் மக்கள் அறிந்து கொண்டுள்ளனர். அமெரிக்க அரசியல்வாதிகள் ஹாங்காங்கின் மூலம் சீனாவைச் சீர்குலைக்க சீன மக்கள் அனைவரும் அனுமதிக்க மாட்டர்.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com